மேலும் அறிய
HPV vaccine : HPV தடுப்பூசியை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
HPV vaccine : HPV என்பது பல விதமான புற்றுநோய்களை உண்டாக்கும் வைரஸ்களாகும். குறிப்பாக கருப்பை வாயில் புற்றுநோயை உண்டாக்கும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
1/6

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், 90 சதவீதம் HPV வைரஸுடன் தொடர்புடையது. அதனால், கூடிய விரைவில் இந்த HPV தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை செய்கின்றனர்.
2/6

9-15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். 45 வயதுக்கு உட்பட்ட பெண்களும் இதை போட்டுக்கொள்வது நல்லது.
3/6

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், HPV தொடர்புடைய புற்றுநோய், தொண்டையின் பின்பகுதியிலும் வாயிலும் ஆசனவாயிலும் ஆணுறுப்பிலும் வரலாம்.
4/6

தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும், 3 வருடத்திற்கு ஒருமுறை மகப்பேறு மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த பரிசோதனை, ஆங்கிலத்தில் (Pap Smear) என்று அழைக்கப்படுகிறது.
5/6

கருப்பை வாய் புற்றுநோய்க்கு போடப்படும் தடுப்பூசிகள் எந்த பிராண்டாக இருந்தாலும், அவை இரண்டு வகையான புற்றுநோயை மட்டுமே தடுக்கும்
6/6

இணையத்தில், HPV தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால், இது உண்மையல்ல. தடுப்பூசி போட்டுக்கொள்ள பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். உங்கள் மருத்துவரை அணுகி, தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள்
Published at : 03 Feb 2024 03:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion