மேலும் அறிய
Udhayanidhi Stalin: எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில் தான்..முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!
Udhayanidhi Stalin: பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையில் வெளியான மாமன்னன் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தெளிவாக பதிலளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின்
1/6

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாமன்னன்.
2/6

இன்று இப்படம் வெளியானதையொட்டி அப்படக்குழு, செய்தியாளர் சந்திப்பில் பங்குபெற்றது. முதலில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது, “இந்த கதையை படமாக எடுக்க முடியாது என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் உதயநிதி சார் சிறப்பாக முடித்து கொடுத்துள்ளார் என்று கூறினார்.
3/6

பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “அனைவருக்கும் பக்ரீத் தின வாழ்த்துக்கள். முழு வெற்றியும் மாரி செல்வராஜ் சார், அவருடைய எழுத்துக்கும், கீர்த்தி, ஃபஹத் சார், வடிவேலு சார், ரஹ்மான் சார், தேனி ஈஸ்வர் சார், மற்ற நடிகர்கள், துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுக்கு சமர்பணம்” என்று கூறினார்.
4/6

மேலும் பேசிய அவர், “ 6 மாச 7 மாச உழைப்பு. அந்த உழைப்பை மக்கள் வரவேற்கும் போது கொண்டாடும் போது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுடைய வரவேற்புக்கு நன்றி.” என்றார்.
5/6

பிறகு செய்தியாளர் ஒருவர் மீண்டும் படம் நடிப்பீர்களா? இது உங்களை பூர்த்தி செய்ததா? வாய்ப்பு இருக்கா? என கேட்ட போது, “இந்த படமே எனது ஆசையை பூர்த்தி செய்துவிட்டது. இனி வாய்ப்பில்லை. வாய்ப்பில்லை ராஜா.” என சிரித்து கொண்டே பதில் கூறினார் உதயநிதி.
6/6

சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்ட போது, “அனைத்து இடங்களில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரே படத்தில் சமுதாயத்தை திருத்துகிறோம் என்று சொல்லவில்லை. நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். எங்கள் வலியை சொல்கிறோம். மக்கள் உணர வேண்டும். மக்கள் திருந்த வேண்டும். அதற்கு இந்த அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.” என பேசி முடித்தார் உதயநிதி ஸ்டாலின்.
Published at : 29 Jun 2023 06:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















