மேலும் அறிய
காதல் கணவருடன் நடிகை ரம்யா பாண்டியன் - க்யூட் ஃபோட்டோ ஷூட்!
ரம்யா பாண்டியன் - லவால் தவான் இருவரின் க்யூட் புகைப்படங்களின் தொகுப்பு இது.

ரம்யா பாண்டியன் - லவால் தவான்
1/5

’டம்மி டப்பாசு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் மிக பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன். தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.
2/5

இந்நிலையில், கடந்தாண்டு பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையம் ஒன்றில் சேர்ந்தார் ரம்யா பாண்டியன். தொடர்ந்து யோகா, உடற்பயிற்சி உள்ளிட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் என அடுத்த டிரெண்டிங்கில் வைரலானார். இந்நிலையில்தான் அவருக்கு பயிற்சியாளராக இருந்த யோகா மாஸ்டர் லவால் தவானுடன் காதல் வயப்பட்டார் ரம்யா பாண்டியன்.
3/5

இதனையடுத்து சமீபத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்திய ரம்யா, இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தனது சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார். அதன்படி, ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் நடிகை ரம்யா பாண்டியன், தவோன் திருமணம் விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.
4/5

அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் தம்பதி உள்பட நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. ரம்யா பாண்டியனுக்கு திரையுலகினரும், அவரது ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
5/5

இவர்கள் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் கூறி, பச்சைக் கொடி காட்டினர். மாப்பிள்ளை லோவன் விருப்பப்படி ரிஷிகேஷ், சிவபுரி கங்கைக்கரையில் திரும் ணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சென்னையில் விமரிசையாக வரவேற்பும் நடந்தது. இவர் திருமணம் முடிந்து கணவரோடு திருசெந்தூர் சென்று சாமி தரிசனம் செய்தார், அங்கு, நடிகர் சூரியும் வந்திருக்க அவர், புதிய திருமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published at : 18 Nov 2024 07:55 PM (IST)
Tags :
Tamil Actress Ramya Pandianமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
அரசியல்
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion