மேலும் அறிய
தமிழ் புத்தாண்டில் வெளியாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்கள்!
தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.
தமிழ் புத்தாண்டு அன்று வெளியான சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்கள்
1/6

அபூர்வ சகோதரர்கள் - 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். இந்த படத்தைற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் கமலுடன் கௌதமி, நாகேஷ், ஸ்ரீவித்யா, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்த இந்த படம் கமலுக்கு சிறந்த வெற்றி படமாக அமைந்தது.
2/6

கேப்டன் பிரபாகரன் - கே.ஆர்.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான படம் கேப்டன் பிரபாகரன். இந்த படம் விஜயகாந்த்-இன் 100 ஆவது திரைப்படம் ஆகும். ஆக்ஷன் படமான இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சரத் குமார், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் விஜயகாந்தின் திரை வாழ்கையில் முக்கியமான படம் என்றே சொல்லலாம்.
Published at : 14 Apr 2023 03:25 PM (IST)
மேலும் படிக்க





















