மேலும் அறிய
Samantha Birthday: ’இப்படியொரு உள்ளம் கொண்டவரா சமந்தா..?’ சாகுந்தலம் நாயகி குறித்த அறியப்படாத தகவல்கள் இதோ!
Samantha Birthday: தென்னிந்திய நடிகை சமந்தா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி, அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம் வாங்க.

சமந்தா குறித்த
1/8

தமிழ், தெலுங்கு என இரண்டு தென்னிந்திய மொழி படங்களிலும் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தாவிற்கு இன்று பிறந்தநாள். இவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வேமா?
2/8

சினிமாவிற்கு வருவதற்கு முன்னர், சமந்தா, நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினரை வரவேற்க்கும் “Welcom Girl”ஆக வேலை பார்த்து வந்தாராம்.
3/8

இவர் முதலில் நடித்த படம், மாஸ்கோவின் காவிரி. ஆனால், இவர் தெலுங்கில் நடித்த யே மாயா சேசாவே என்ற படம்தான் முதலில் வெளியானது.
4/8

ஐ படத்தில் நடிப்பதற்கும் கடல் படத்தில் நடிப்பதற்கும் சமந்தாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சமந்தாவால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போனது.
5/8

2015ஆம் ஆண்டு தமிழகத்தை மழை-வெள்ளம் சூழ்ந்த போது, மக்களுக்காக சமந்தா, 30 லட்ச ரூபாயை தமிழ்நாடு அரசின் நிவாரண நிதிக்காக வழங்கினார்.
6/8

சமந்தாவை பலர் சாம் என அழைத்தாலும், யசோதா பட ரிலீசிற்கு பிறகு இவரது நெருங்கிய நண்பர்கள் இவரை யசோதா என்றுதான் அழைக்கின்றனராம்.
7/8

சமந்தா, நடிகை என்பதைத்தாண்டி மிகப்பெரிய கொடையுள்ளம் கொண்டவர். இவரது நற்செயல்களை பாராட்டும் வகையில் ஒரு ரசிகர் இவருக்காக ஆந்திராவில் உள்ள குண்டூர் என்ற இடத்தில் சமந்தாவிற்கு கோயில் கட்டியுள்ளார்.
8/8

சமந்தாவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து மழை குவித்து வருகின்றனர்.
Published at : 28 Apr 2023 10:56 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
அரசியல்
பட்ஜெட் 2025
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion