மேலும் அறிய
Shooting spot Accidents : மீண்டும் மீண்டுமா.. படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் பேக் டு பேக் விபத்துகள்!
படப்பிடிப்பு தளத்தில் நடந்த சமீபத்திய விபத்துகள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்துகள்
1/7

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், ஸ்டண்ட் இயக்குநர் சுரேஷ் என்பவர் உயிரிழந்தார்.
2/7

ஏ.எல் விஜய்யின் இயக்கத்தில் உருவான ‘அச்சம் என்பது இல்லையே’ படப்பிடிப்பின் போது அப்படத்தின் கதாநாயகனான அருண் விஜய்க்கு விபத்து ஏற்பட்டது. இதனால், அவர் இப்போது வரை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.
3/7

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து நடந்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார்.
4/7

மார்க் ஆண்டனி படத்தில் விஷால் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில், எதிர்பாராத விதமாக தொழில்நுட்பக் கோளாறால் லாரி நிற்காமல் ஓடியது. நூலிழையில் விஷாலும் அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த மற்றவர்களும் உயிர் தப்பினர்.
5/7

குட்டி புலி படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்த விஷ்வா விஜய், தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, பைக் ஸ்டண்ட் செய்த விஷ்வா, கீழே விழுந்து பலத்த காயத்திற்கு ஆளானார்.
6/7

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகனாகிய அமீன், இசை நிகழ்ச்சி ஒன்றில், நடக்கவிருந்த விபத்தில் இருந்து தப்பினார். அந்த செட்டில் இருந்த சாண்ட்லியர் கீழே விழும் போது அமீன் தப்பினார்.
7/7

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு, படப்பிடிப்பு தளத்தில் காயம் ஏற்ப்பட்டுள்ளது. பின்னர், அவர் வீடு திரும்பினார்.
Published at : 06 Mar 2023 12:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement