மேலும் அறிய
Lust Stories 2 : எப்படி இருக்கிறது லஸ்ட் ஸ்டோரிஸ் முதல் கதை..? குட்டி விமர்சனம் இதோ..!
Lust Stories 2: கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சீரிஸ் லஸ்ட் ஸ்டோரீஸ் . தற்போது இந்த ஆந்தாலஜியின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது.

லஸ்ட் ஸ்டோரிஸ் 2
1/6

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான சீரிஸ் லஸ்ட் ஸ்டோரீஸ். சமூகத்தில் பாலியல் உறவுகள் சார்ந்த கதைகள் குறித்தான ஒரு புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது லஸ்ட் ஸ்டோரீஸ். தற்போது இந்த ஆந்தலாஜியின் இரண்டாம் பாகம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது.
2/6

தமன்னா, கஜோல்,மிருணாள் தாக்கூர் , விஜய் வர்மா, திலோதமா ஷோமே ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த தொடரின் முதல் கதை குறித்து பார்ப்போம்.
3/6

மிருணாள் தாக்கூர் நடித்துள்ள இந்த பகுதியில் காதலில் காமத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கும் ஒரு பாட்டிக்கும் பேத்திக்கும் இடையிலான விவாதத்தை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் பால்கி.
4/6

ஆனால் நகைச்சுவை படத்தில் இருந்ததா என்றால் இல்லை.. பேத்தி கதாபாத்திரத்தில் நடித்த மிருணால் தாக்கூர் எல்லாவற்றுக்கும் மிகையான நடிப்பை கொடுத்ததன் மூலமாக நம்மை நகைச்சுவை என்று நம்பவைக்க முயற்சித்தாரா என்று தெரியவில்லை. எந்த வித முரணையும் உணர்த்தாமல் செக்ஸ் குறித்தான ஒரு விளம்பரம் போல் கடந்துவிடுகிறது படம்.
5/6

மேலும் ஒரு திருமண உறவில் காமத்தின் உயிர்ப்பைத் தக்கவைத்துக் கொள்வது பற்றி பேச முனைந்த இயக்குநர் ஒரு நல்ல உடலுறவு என்பதை குறித்தான தெளிவற்ற பிம்பங்களையே முன்வைக்கிறார்.
6/6

மொத்தத்தில் லஸ்ட் ஸ்டோரீஸின் முதல் கதை பூட்டிய கதவுகளை உடைக்க முயற்சிக்கும் உடைந்த சுத்தியல்.
Published at : 30 Jun 2023 03:54 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement