மேலும் அறிய
கொட்டோ கொட்டுனு கொட்டும் காசு; ஹோட்டல் பிஸ்னஸிலும் வெயிட்டாக காசு பார்க்கும் தமிழ் பிரபலங்கள்!
சினிமாவில் நடித்துக் கொண்டே, ஹோட்டல் பிஸ்னஸ் செய்து வெயிட்டான லாபம் பார்க்கும் சில பிரபலங்கள் பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

வெற்றிகரமாக ஹோட்டல் நடத்திவரும் பிரபலங்கள்
1/6

நடிகர் ஆதியை திருமணம் செய்து கொண்டு, நடிப்பில் இருந்து விலகிய, நடிகை நிக்கி கல்ராணி பெங்களூரில் ஸ்மைலிஸ் என்கிற ரெஸ்ட்டாரெண்ட்டை நடத்தி வருகிறார். சினிமாவில் இருந்து விலகி விட்டதால் தன்னுடைய பிஸினஸில் தான் இவர் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
2/6

காமெடி நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி என பல பரிமாணங்களில் பார்க்கப்படும் கருணாஸ் ஹோட்டல் நடத்தி வருவது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சென்னை சாலிகிராமத்தில் 'ரத்ன விலாஸ்' என்கிற உணவகத்தை தான் இவர் நடத்தி வருகிறார்.
3/6

தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்கே சுரேஷ் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து கே கே நகரில் சாப்பிட வாங்க என்கிற ஹோட்டலை நடத்தி வருகிறார். இந்த உணவகத்தை இவரின் மனைவி தான் பார்த்து கொள்வதாக கூறப்படுகிறது.
4/6

ஆஹா ஆர்யாவும் இந்த லிஸ்டில் இருக்கிறாரா என ஆச்சர்யப்படுகிறீர்களா? ஆமாம், டயட், ஒர்கவுட் என உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள அறிவுறுத்தும் இவர், சென்னை அண்ணா நகரில் 'Sea Shell' என்கிற அசைவ உணவகத்தை நடத்தி மக்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு வருகிறார்.
5/6

காமெடியன் ட்ராக்கில் இருந்து ஹீரோ ட்ராக்குக்கு மாறியுள்ள, மதுரை மைந்தன் சூரி, தன்னுடைய அண்ணன் - தம்பிகள் உதவியுடன் மதுரையில், 'அம்மன்' என்கிற ஹோட்டலை நடத்தி வருகிறார்.
6/6

கடந்த சில வருடங்களாக சரியான படவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் ஜீவா, ஓன் எம்பி என்கிற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். சென்னை ஈசிஆர் பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலில் ஸ்டாட்டர்ஸ் தான் ரொம்ப ஸ்பெஷல்.
Published at : 10 Dec 2024 11:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
நிதி மேலாண்மை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion