மேலும் அறிய
(Source: Poll of Polls)
Cinema Updates : கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் மாஸ் காட்டப்போகும் சத்யராஜ்!
Cinema Updates : ஹிந்தி சினிமா முதல் தமிழ் சினிமா வரை, அனைத்திலிருந்தும் சூப்பர் அப்டேட்கள் வந்துள்ளன.
தமிழ் சினிமா
1/5

அஜித் குமார்- நயன்தாரா இணைந்து நடித்து வரும் படம் "குட் பேட் அக்லி". இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவருகிறார். ரஷ்யாவில் நடந்து வரும் முதல் கட்ட படப்பிடிப்பு ஜூன் இறுதி வாரத்தில் நிறைவடைய உள்ளது என்றும் இது முடிந்தவுடன் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது.
2/5

கமல்ஹாசன்- ஷங்கர் கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் இந்தியன் 2 . இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, படத்தின் செகண்ட் சிங்கிள் மே 29 ஆம் தேதி ரிலீஸாக, படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி நடக்க போவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
3/5

நடிகர் விஜய்யின் 69வது படமான "தி கோட்" படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என்று யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
4/5

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கூலி. இந்த படத்தின் டைட்டில் டீசர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பெய் பெற்றது. தற்போது இந்த படத்தில் நடிகர் சத்யாராஜ் இணைய உள்ளார் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5/5

சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சுனில் ஷெட்டி ஆகியோர் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம் சிக்கந்தர். இந்த படம் அடுத்த ஆண்டின் ரமலான் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என்று அறிவித்தது படக்குழு. தற்போது இந்த படத்தில் சத்யராஜ் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
Published at : 27 May 2024 12:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















