மேலும் அறிய
Alphonse Puthren : ‘சினிமாவை விட்டு விலகுகிறேன்..’ ஷாக் கொடுத்த ப்ரேமம் இயக்குநர்!
Alphonse Puthren : யாரும் எதிர்பார்க்காத அளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு விட்டு அல்போன்ஸ் புத்திரன் நீக்கியுள்ளார்.

அல்போன்ஸ் புத்திரன்
1/6

நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த நேரம் படத்தை இயக்கி திரையுலகில் கால் தடம் பதித்தவர் அல்போன்ஸ் புத்திரன்.
2/6

அடுத்தாக, நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா, மடோனாவை வைத்து ப்ரேமம் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
3/6

அதனை தொடர்ந்து அவியல் எனும் ஆந்தாலஜியையும், பிரித்விராஜ் - நயன்தாராவை வைத்து கோல்ட் படத்தையும் இயக்கினார்.
4/6

கிப்ட் எனும் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் வந்தது
5/6

இப்போது “எனது சினிமா கெரியரை விட்டுவிடுகிறேன். நேற்றுதான் எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. யாருக்கும் நான் பாரமாக இருக்க விரும்பவில்லை. பாடல் வீடியோக்கள், குறும்படங்களை தொடர்ந்து இயக்குவேன். அதிகபட்சம் ஓடிடி-யில் ஏதாவது செய்ய முயற்சி செய்யவுள்ளேன். சினிமாவை விட்டு போக எனக்கு மனதில்லை. இருப்பினும் எனக்கு வேறு வழி இல்லை. என்னால் நிறைவேற்ற முடியாத காரியங்களுக்கு நான் உறுதியளிக்க விரும்பவில்லை. உடல்நல குறைவும் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களும் படத்தில் வரும் இண்டர்வெல் போல் பெரிய ட்விஸ்ட்டை கொடுக்கிறது.” என பதிவிட்டுள்ளார்
6/6

இந்த பதிவை வெளியிட்ட கொஞ்ச நேரத்திற்கு பிறகு அவரே அதை நீக்கிவிட்டார். இந்த போஸ்ட் மலையாள சினிமாவை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Published at : 30 Oct 2023 04:42 PM (IST)
Tags :
Alphonse Puthrenமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion