மேலும் அறிய
Vidaa Muyarchi Update : பொங்கல் பண்டிகைக்கு அல்வா போன்ற அப்டேட் கொடுத்த நெட்ஃபிளிக்ஸ்!
Vidaa Muyarchi Update : படம் தியேட்டரில் வெளியான பின் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளது.
விடா முயற்சி அப்டேட்
1/6

கடந்தாண்டு பொங்கலுக்கு ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் வெளியானது.இதன் பின் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார்? என்ற குழப்பம் நிலவியது.
2/6

இணையத்தில் எக்கசக்கமான தகவல்கள் பரவியது. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில், லைகா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
3/6

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவிருக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித் நடிக்க, அனிருத் இசையமைப்பார் என்பதே அந்த அறிவிப்பு
4/6

அந்த அறிவிப்புக்கு பின், ஒரு அப்டேட் கூட வராமல் இருந்தது. நடிகர் அஜித்தும், பைக் டூரில் படு பிசியாகிவிட்டார்.
5/6

இதற்கு இடையே விடாமுயற்சி படம் கைவிடப்படவுள்ளது என்ற தகவலும் பரவியது. வெளிநாடுகளில் அஜித் சுற்றி வரும் புகைப்படங்களும் வீடியோக்களுமே அஜித்தின் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்து வந்தது. பின் படக்குழுவினர் ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜான் செல்லும் தகவல் வந்தது. அதற்கேற்றவாறு, ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியானது.
6/6

இந்நிலையில், பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், விடாமுயற்சியின் டிஜிட்டல் உரிமத்தை பெற்றுவிட்டதாக அறிவிப்பு விட்டுள்ளது. அதுவும் விடாமுயற்சி படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறதாம். ஆக, படம் தியேட்டரில் வெளியான பின் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 17 Jan 2024 12:44 PM (IST)
மேலும் படிக்க





















