மேலும் அறிய
Adipurush : சர்ச்சையை கிளப்பிய ஆதிபுருஷ்.. பாலிவுட்டிற்கு தடைவிதித்த நேபாள அரசு!
சீதை நேபாளத்தில் பிறந்ததாக அந்த நாட்டில் நம்பிக்கை உள்ளது. ஆனால் அதிபுரூஷ் படத்தில் சீதை இந்தியாவின் தாய் என்ற வசனம் இடம் பெற்றுள்ளதால் நேபாளில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

ஆதிபுருஷ் போஸ்டர்
1/6

ராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர்.
2/6

இந்த படம் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. முக்கியமாக இதன் கிராபிக்ஸ் காட்சிகளை மக்கள் ட்ரால் செய்தனர்.
3/6

படத்தில் ராமர், ஹனுமன் கதாபாத்திரங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக வட மாநிலங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் படத்தில் உள்ள சர்ச்சையான வசனங்களை நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
4/6

இந்த நிலையில் நேபாளத்தில் ஆதிபுருஷ் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சீதை நேபாளத்தில் பிறந்ததாக அந்த நாட்டில் நம்பிக்கை உள்ளது. ஆனால் அதிபுருஷ் படத்தில் சீதை இந்தியாவின் தாய் என்ற வசனம் இடம் பெற்றுள்ளதால் நேபாளில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
5/6

நேபாள தலைநகரமான காத்மாண்டு, போக்ரா ஆகிய நகரங்களில் அனைத்து ஹிந்தி படங்களுக்கும் தடைவிதித்தார் அங்குள்ள மேயர்.
6/6

அதுமட்டுமின்றி ஒவ்வொரு தியேட்டருக்கும் போலீசார் நேரில் சென்று ஹிந்தி படங்கள் திரையிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் படத்தில் உள்ள சர்ச்சை வசனத்தை நீக்கும் வரை நேபாளத்தில் ஹிந்தி படங்களுக்கான தடை தொடரும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது.
Published at : 21 Jun 2023 04:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion