Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் இடம்பெற உள்ள வேரியண்ட்களின் விவரங்களை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Tata Punch Facelift 2026: பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனின் ஒவ்வொருவேரியண்டிலும் இடம்பெற உள்ள அம்சங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து வரும் 13ம் தேதி சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே புதிய எடிஷனில் உள்ள வேரியண்ட்கள் அதில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களின் விவரங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. அதன்படி ஸ்மார்ட், ப்யூர், ப்யூர் ப்ளஸ், அட்வென்சர், அக்கம்ப்ளிஸ்ட் மற்றும் அக்கம்ப்ளிஸ்ட்+S என 6 வேரியண்ட்களில் சந்தைப்படுத்தபட உள்ளதாம். ஸ்மார்ட் வேரியண்டை தவிர மற்ற அனைத்தும் பழைய எடிஷன்களை போலவே உள்ளன. அதேநேரம், பழைய எடிஷனில் இருந்த க்ரியேடிவ் + மற்றும் க்ரியேடிவ் +S ஆகிய வேரியண்ட்கள் புதிய எடிஷனில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் விவரங்கள்:
பஞ்சின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. அதன்படி, 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி ஆப்ஷன் அப்படியே தொடரக்கூடுமாம். அதேநேரம், பெட்ரோல் சிஎன்ஜி இன்ஜினுடன் 5 ஸ்பீட் ஆட்டோமேடட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. இது டியாகோ மற்றும் டைகோர் கார் மாடல்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் விலை விவரங்கள் வரும் 16ம் தேதி அறிமுகப்படுத்தும்போது, வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் - வேரியண்ட்களுக்கான பிரத்யேக அம்சங்கள்
ஸ்மார்ட் வேரியண்ட்: அடிப்படை வேரியண்ட்களில் இருந்தே வழங்கப்படும் புதிய எல்இடி முகப்பு விளக்குகள் கவனத்தை ஈர்க்கின்றன. அடிப்படை வேரியண்டான ஸ்மார்ட் க்ரேடிலேயே ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, சிட்டி மற்று ஈகோ ட்ரைவ் மோட்கள், 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் மற்றும் டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் உள்ளன.
ப்யூர் வேரியண்ட்: வசதி மற்றும் சொகுசை மேம்படுத்தும் விதமாக ப்யூர் வேரியண்டில் பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இண்டக்ரேடட் ஸ்டோரேஜ் பாக்ஸ் உடன் கூடிய ஃப்ரண்ட் செண்டர் ஆர்ம்ரெஸ்ட், ரியர் ஏசி வெண்ட்கள், ஸ்டியரிங் மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல்கள், ரியர் டிஃபாகர், ஆண்டி-க்ளேர் IRVM ஆகியவை உள்ளன. ஸ்மார்ட் வேரியண்டை போன்று இதிலும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ப்யூர் ப்ளஸ் வேரியண்ட்: ப்யூர் ப்ளஸ் வேரியண்டில் கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக கூடுதல் அத்தியாவசியமான அம்சங்கள் பல இடம்பெற்றுள்ளன. அதில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ அம்சத்துடன் உடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் USB டைப்-C சார்ஜிங் போர்ட், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் உயர் தரத்திலான ரிவர்ஸ் கேமரா ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அட்வென்சர் வேரியண்ட்: அட்வென்சர் வேரியண்டில் பல ப்ரீமியம் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 15 இன்ச் ஸ்டைலிஷ்ட் வீல்கள், ரெயின் சென்சிங் வைபர்ஸ், ரியர் வைபர் மற்றும் வாஷர், பேசிவ் கீலெஸ், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பிற்காக ஆட்டோமேடிக் முகப்பு விளக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா சிஸ்டமும் சேர்க்கப்பட்டுள்ளன.
அக்கம்ப்ளிஸ்ட் வேரியண்ட்: இந்த வேரியண்டானது 16 இன்ச் அலாய் வீல்கள், புதிய பகல்நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள், புதிய கனெக்டட் டெயில் லைட்கள், 10.2 இன்ச் டச்ச்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பெரிய மற்றும் விலையுயர்ந்த டாடா மாடல்களில் இருப்பதை போன்ற புதிய டச் அண்ட் டாகல் க்ளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவற்றை கொண்டு ப்ரீமியமாக திகழ்கிறது.
அக்கம்ப்ளிஸ்ட்+S வேரியண்ட்: இந்த வேரியண்டில் மிகவும் பேசுபொருளாக மாறியுள்ள அம்சம் என்பது வாய்ஸ்-அசிஸ்டட் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகும். இந்த டாப் எண்ட் வேரியண்டானது கார்னெரிங் ஃபங்க்சனுடன் எல்இடி முகப்பு விளக்குகள், 7 இன்ச் ஹை-டிஃபனைஷன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், ஆட்டோ-டிம்மிங் IRVM மற்றும் கனெக்டட் கார் ஃபங்க்சன்ஸ் ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளனவாம்.





















