மேலும் அறிய
Tamannaah Bhatia : எல்லைமீறிய ரசிகர்களிடம் ஆவேசமடைந்த தமன்னா.. பொது இடத்தில் பரபரப்பு!
கேரளாவில் தன்னிடம் அத்துமீற முயன்ற ரசிகர்களிடம் தமன்னா கோபப்பட்டு கத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமன்னா பாட்டியா
1/6

இந்திய திரையுலகின் மிகப்பிரபலமான நடிகையாக உலா வருபவர் தமன்னா. 2005-ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமான தமன்னா ”கேடி” என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கில் நடித்து முன்னணி நடிகையாக உலா வரும் தமன்னா தற்போது இந்தியிலும் பிசியாக உள்ளார்.
2/6

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது லூலூ வணிக வளாகம். இந்த வளாகத்தில் புதிய கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் வருகையை அறிந்த ரசிகர்கள் வணிக வளாகத்தில் குவிந்தனர்.
3/6

ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. தமன்னா வந்த பிறகு ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர். பலரும் அவருடன் செல்ஃபி எடுக்கவும், தமன்னாவை புகைப்படம் எடுக்கவும் முண்டியடித்தனர்.
4/6

தமன்னாவும் ரசிகர்கள் சிலருடன் செல்ஃபியும், புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதனால், ரசிகர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, தமன்னா ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
5/6

அப்போது, ரசிகர்களில் சிலர் தமன்னாவிடம் அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தமன்னா கூட்டத்திலே கத்தியுள்ளார். இதையடுத்து, தமன்னாவின் பாதுகாப்பிற்காக வந்த பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். தமன்னா தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்ற ரசிகர்களிடம் கோபமாக கத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
6/6

தமன்னா நடிப்பில் இந்தியில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் வெளியாக உள்ளது குறிப்படத்தக்கது.
Published at : 27 Jun 2023 12:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion