மேலும் அறிய
Jailer Audio Launch : "அலப்பறை கிளப்புறோம்...தலைவரு நிரந்தரம்...” ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சங்கமிக்கும் தென்னிந்திய நடிகர்கள்!
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 28 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற உள்ளது.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா
1/6

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.
2/6

நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் தமன்னா, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
3/6

கடந்த ஜூலை 6 ஆம் தேதி “காவாலா” பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
4/6

இப்படியான நிலையில், ஜெயிலர் படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக ‘ஹூக்கும்' பாடலும் வெளியாகி இனையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
5/6

தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வருகின்ற ஜூலை 28 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
6/6

இதில் நடிகர்கள் மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார் சுனில், மற்றும் நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்னன் என பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
Published at : 22 Jul 2023 12:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement