மேலும் அறிய
Allu Arjun : ரசிகர்கள் படை சூழ ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மாஸ் எண்டிரி கொடுத்த அல்லு அர்ஜூன்!
புஷ்பா 2 படப்பிடிப்பிற்காக ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு சென்ற அல்லு அர்ஜூனை, அவர் ரசிகர்கள் ஆராவாரத்துடன் வரவேற்றனர்.

ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அல்லு அர்ஜூன்
1/6

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜூன் நடித்த திரைப்படம் புஷ்பா. இப்படம் 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் வெளியானது.
2/6

இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது.
3/6

அதைனையடுத்து சமீபத்தில் நடந்த 69வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து தேசிய விருது பெற்ற முதல் தெலுங்கு ஹீரோ என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் அல்லு.
4/6

அதைதொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படிப்பிடிப்பில் பிஸியாக நடித்துவருகிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.
5/6

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
6/6

இந்நிலையில் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அவர் வருவதற்கு முன்பாக அங்கு குவிந்துள்ளனர். ரசிகர்கள் சூழ ஃபிலிம் சிட்டியின் உள்ளே சென்றுள்ளார். இது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது.
Published at : 30 Aug 2023 02:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement