"எக்ஸ் ப்ரோலாக்" - முதல் எலக்ட்ரிக் காரின் டீசரை வெளியிட்டது டொயாட்டோ.
கிய்ச்சிரோ டொயோட்டா என்பவரால் 1930-களில் ஜப்பான் நாட்டை மையமாக கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்தியாவை பொறுத்தவரை பல ஆண்டுகளாக மோட்டார் நிறுவனங்களின் வளர்ச்சி என்பது கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. அதே போல இந்தியாவில் டொயாட்டோ நிறுவனம் SUV எனப்படும் பெரிய ரக கார்கள் உற்பத்தியில் பெரும் பங்கை வகித்து வருகின்றது.
கிய்ச்சிரோ டொயோட்டா என்பவரால் 1930-களில் ஜப்பான் நாட்டை மையமாக கொண்டு டொயோட்டா நிறுவனம் தொடங்கப்பட்டது. பல நாடுகளில் பல வகை கார்களை அறிமுகம் செய்துள்ள இந்த நிறுவனம் தற்போது முதல் முறையாக எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் களமிறங்கி உள்ளது.
"எக்ஸ் ப்ரோலாக்" என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கார் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முழுமைகாக இந்த காரின் தோற்றம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதால் இந்த கார் மீதான எதிர்பார்ப்பு பெருமளவில் உள்ளது. உலகளவில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி இந்த கார் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய மக்கள் மீது அதிக கவனம் செலுத்தி இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் e-TNGA கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட முதல் டொயோட்டாவாக இந்த "எக்ஸ் ப்ரோலாக்" இருக்கும் என்று கூறப்படுகிறது.