Watch Video: வானவில் வண்ண மலைப்பாம்பு, வெள்ளை முதலை... நண்பர்களை அறிமுகப்படுத்தும் மிருகக்காட்சி சாலை காப்பாளர்!
தான் பணிபுரியும் மிருகக்காட்சி சாலையில் உள்ள வானவில் வண்ண மலைப்பாம்புடனும் ’கோக்கனட்’ எனும் வெள்ளை நிற முதலை உடனும் நட்பு பாராட்டி வீடியோக்கள் பகிர்ந்து வருகிறார்.
நேரிலும் சரி, வீடியோக்களிலும் சரி பார்த்த உடனேயே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி பயம் கொள்ள வைப்பதில் பாம்புகளுக்கு நிகர் வேறு உயிரினங்கள் இல்லை!
ஆனால் இன்றைய இணைய உலகில் பாம்புகள் உள்பட அனைத்து காட்டு உயிரினங்களிடமும் நட்பு பாராட்டும் விந்தை மனிதர்கள் நாள்தோறும் நமக்கு அறிமுகமானபடி இருக்கின்றனர்.
வானவில் வண்ண மலைப்பாம்பு!
அந்த வகையில் முன்னதாக மிருகக்காட்சி சாலை காப்பாளர் ஒருவர் வானவில் வண்ண பெரிய மலைப்பாம்பு ஒன்றை தன் நண்பன என அறிமுகப்படுத்திய வீடியோ இன்ஸ்டாவில் லைக்குகளைக் குவித்து வருகிறது.
வானவில் வண்ணத்தில் பார்த்தவுடன் முதுகெலும்பை சில்லிட வைக்கும் தோற்றத்தைக் கொண்ட இந்த மலைப்பாம்பை கையில் தூக்கிக் கொஞ்சுகிறார் ஜே ப்ரூவர் எனும் மிருகக் காட்சி சாலை காப்பாளர். அது மட்டுமல்லாது அதனை தன் நண்பன் என அறிமுகப்படுத்தியும் வைக்கிறார்.
View this post on Instagram
பல ஆண்டுகளாக இந்த மலைப் பாம்பை தான் பராமரித்து வந்துள்ளதாகவும் தற்போது இருவரும் நண்பர்களாகி உள்ளதாகவும் கூறி, ஜே ப்ரூவர் மலைப்பாம்பைக் கட்டியணைத்து வீடியோவில் நட்பு பாராட்டுகிறார்.
இந்த வீடியோ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.
வெள்ளை முதலை
View this post on Instagram
ஜே ப்ரூவர் தான் பணிபுரியும் மிருகக்காட்சி சாலையில் உள்ள ’கோக்கனட்’ எனும் வெள்ளை நிற முதலையையும் அறிமுகம் செய்து அது குறித்த சில்லிட வைக்கும் வீடியோக்களையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.