(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video | காதலே.! காதலே! இது காதல் நூடுல்ஸ்..! இணைய மனங்களை வென்ற வைரல் ஜோடி..
நான் நீ என்றில்லாமல் நாம் என்பதில் சுழல்கிறது காதலின் அச்சாரம். இந்த வார்த்தைகளை எல்லாம் காட்சி மொழியாக காட்டியுள்ளனர் ஒரு கணவனும் மனைவியும்.
'எனக்காக பொறந்தானே எனதழகா' என்று பாடல் பாடும் அளவுக்கு அன்பால் இணையத்தை கவந்துள்ளனர் ஒரு தம்பதி. காதலை கடத்துவதிலும், அன்பை பாசாங்கற்று பரிமாறி கொள்வதிலும் தான் தம்பதிகளின் காதல் அடுத்தடுத்த நிலை செல்கிறது. நான் நீ என்றில்லாமல் நாம் என்பதில் சுழல்கிறது காதலின் அச்சாரம். இந்த வார்த்தைகளை எல்லாம் காட்சி மொழியாக காட்டியுள்ளனர் ஒரு கணவனும் மனைவியும்.
‛கடலா... ஆகாயமா... சில்வண்டு சிக்கும்... சிறுத்தை சிக்காது’ பறக்கிறாரா மிதக்குறாரா ராஜேந்திர பாலாஜி?
புதியதாக திருமணமான அந்த ஜோடி உணவகத்தில் அமர்ந்து நூடுல்ஸ் சாப்பிடுகின்றனர். அப்போது நூடுல்ஸ் சாப்பிட பயன்படுத்தும் ஜோப்ஸ்டிக்கை மனைவிக்கு பயன்படுத்த தெரியவில்லை. உடனடியாக அருகில் இருக்கும் கணவன் அதனை எப்படி பயன்படுத்த வேண்டுமென்பதை காதலோடு கலந்து சொல்லிக் கொடுக்கிறார்.
மேலும் படிக்க : WATCH VIDEO : ‛இரு தவணை... முதலில் அட்வான்ஸ் கொடு...’ லஞ்சத்தை கொஞ்சமும் கூசாமல் கேட்கும் அதிகாரி!
இதனை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுக்க அது இப்போது வைரலாகியுள்ளது. காதல் என்பது தினம் தினம் எதையாவது கற்றுக்கொள்வது என ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பல்வேறு மொழிகளிலும் ட்ரெண்டாகி வருகிறது. காதல் பாடல்களை இணைத்து பலரும் ரீல்ஸில் வைரலாக்கி வருகிறார்கள்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்