Varshini Venkat: பிக்பாஸ் வீட்டை விட்டு போகும் போது காதலர்களுக்குள் பிரச்னையை கொளுத்தி போட்டு சென்ற பெண் போட்டியாளர்!
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், நடிகையும் - மாடலுமான வைல்டு கார்டு போட்டியாளர் வர்ஷினி வெங்கட் வெளியேறியுள்ளார்.
விஜய் சேதுபதி தொகுதி வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், நேற்றைய தினம் வைல்டு கார்டு போட்டியாளரான வர்ஷினி வெங்கட் சிரித்துக் கொண்டே வெளியேறி உள்ளார். போகிற போக்கில் காதல் ஜோடிக்குள் பிரச்னையை மூட்டி விட்டு சென்றுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 6-ஆம் தேதி, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. இந்த முறை சுவாரஸ்யத்தை கூட்டும் விதமாக ஆண்கள் அணி - பெண்கள் அணி என தனி தனியாக போட்டியாளர்கள் பிரிந்து விளையாடி வருகின்றனர். ஆரம்பத்தில் இது சுவாரசியத்தை கூட்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த முயற்சி பிக்பாஸ் போட்டிக்கு பாதகமாகவே மாறி உள்ளதால், கூடிய விரைவில் இதனை பிக் பாஸ் கேன்சல் செய்ய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வாரம், பழைய போட்டியாளர்களால் கட்டம் கட்டி வெளியேற்றப்பட்டுள்ளார், வைல்டு கார்டு போட்டியாளரான வர்ஷினி வெங்கட். இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நாள் முதலே, பழைய போட்டியாளர்களால் மனதளவில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டார்.
சௌந்தர்யா போல் விளையாட ட்ரை பண்ணுவதாகவும், ஆனால் அது ரொம்ப கேவலமாக உள்ளது என குற்றம் சாட்டிய போட்டியாளர்கள், இவர் மண்டையில் ஒன்றுமில்லை என்றும் கூறி நேரடியாக விமர்சித்தனர். அதே போல் கடந்த வாரம் இவரை மிகவும் மோசமாக விளையாடிய போட்டியாளர் என குறிப்பிட்டு, மற்ற போட்டியாளர்களுக்கு வேலை செய்ய வைத்தனர்.
மற்ற போட்டியாளர்கள் தன்னை பற்றி என்ன சொன்னாலும், அதனை மிகவும் போல்டாக சமாளித்து சிரித்த முகமாகவே வலம் வந்து கொண்டிருந்த வர்ஷினி வெங்கட் தான் இந்த வாரம் சிரித்தபடியே பிக் பாஸ் வீட்டில் இருந்து விடை பெற்றுள்ளார். இந்த வாரம் சாச்சனா வெளியேறவே அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் விஜய் சேதுபதி வர்ஷினி வெங்கட்டை வெளியே அனுப்பி உள்ளார்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது, போட்டியாளர்கள் சிலர் அழுது ஆர்ப்பாட்டம் செய்த பின்னரே வெளியேறும் நிலையில், வர்ஷினி சிரித்துக்கொண்டே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். வர்ஷினியின் எலிமினேஷன் அருண் மனதை ஏதோ செய்ய, வர்ஷினி பாடிய பாடலை கேட்டுவிட்டு உடைந்து அழுதார். மேலும் தான் வரைந்த சில படங்களை அருணிடம் கொடுத்து விட்டு சிரித்து கொண்டே விடைபெற்றார். விஜய் சேதுபதி கூட இப்படி யாருமே சிரித்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இல்லை என கூறினார். வர்ஷினி போகிற போக்கில் அருண் மீது தனக்கு இருந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக செய்த செயல்கள்... அர்ச்சனா - அருண் இடையே பிரச்சனை வர காரணமாக அமைந்து விட போகிறது என கமெண்ட் போட்டு வருகிறார்கள்.