மேலும் அறிய
Advertisement
WATCH VIDEO : ‛இரு தவணை... முதலில் அட்வான்ஸ் கொடு...’ லஞ்சத்தை கொஞ்சமும் கூசாமல் கேட்கும் அதிகாரி!
தீயணைப்புத் துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா தண்டலம் பகுதியில் இயங்கிவரும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள உயர் மாடி கட்டிடங்களுக்கு தீயணைப்புத் துறையினரால் வழங்கப்படக் கூடிய உயர்வகை கட்டட தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்க,வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணகுமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்திய கூட்டு ஆய்வு நடத்தினர்.
இதனையடுத்து தடையில்லா சான்றிதழ் வழங்க வேலூர் மண்டல துணை இயக்குனர் சரவண குமாருக்கு பணம் வழங்க வேண்டும் என கூறி காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார், தனியார் மருத்துவக் கல்லூரி பிரதிநிதியிடம் மூன்று லட்ச ரூபாய் லஞ்ச பணத்தை கேட்டு, முதல் தவணையாக தொகையாக ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை அட்வான்ஸ் ஆக கேட்டுள்ளார். அந்த வீடியோவில் எதிரில் இருப்பவர் 2 இலட்சம் ரூபாய் தருகிறோம் என பேரம் பேசும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது . இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு pic.twitter.com/JoEVjGxkWE
— Kishore Ravi (@Kishoreamutha) December 23, 2021 ">காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார் பேரம் பேசி லஞ்சம் கேட்கும் வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினரிடம் விளக்கம் கேட்க முற்பட்டபோதும் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
மேலும் படிக்க : Today Headlines : பொங்கல் பஸ்...இன்றும் ஆதார் இணைப்பு... ஆஸி., வெற்றி... இன்னும் பல செய்திகள்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion