Watch video: ராஜ நாகத்தை பின்னால் இருந்து முத்தமிடும் நபர்.. அடுத்து நடந்தது என்ன?- வைரல் வீடியோ !
ராஜ நாகத்தை ஒருவர் முத்தமிடும் காட்சி வேகமாக வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு பாம்பு வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இம்முறை ராஜ நாகம் ஒன்றின் தலை மீது பின்னால் இருந்து ஒருவர் முத்தம் இடம் காட்சி பார்ப்பவர் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் அமெரிக்காவைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் பிரயன் பார்சிக் இடம்பெற்றுள்ளார். அவர் ஒரு பெரிய ராஜ நாகம் ஒன்றுக்கு பின்னால் அமர்ந்து கொண்டு அதன் தலையில் முத்தம் இட முயற்சி செய்கிறார். முதலில் சற்று தடுமாறும் அவர் பின்னர் நேர்த்தியாக ராஜ நாகத்தின் தலையில் முத்தமளிக்கிறார்.
View this post on Instagram
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். தற்போது வரை பலரும் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்து இதை ஷேர் செய்து வருகின்றனர். மேலும் பலர் இதே வேளையை நாஜ நாகத்தின் முன்பக்கமாக வந்து செய்ய முடியுமா? என்ற சவாலையும் விடுத்து வருகின்றனர். இது போன்ற விபரீதங்களை யாரும் உரிய பயிற்சி இல்லாமல் செய்யக் கூடாது என்று வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

