America Gunshot: அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு.. டக்லஸ் கவுண்டியில் இருவர் உயிரிழப்பு..
ஜார்ஜியாவில் உள்ள டக்ளஸ் கவுண்டியில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துக்கொண்ட, கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்
![America Gunshot: அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு.. டக்லஸ் கவுண்டியில் இருவர் உயிரிழப்பு.. Two people were killed in a shooting during a celebration in Douglas County, Georgia, attended by more than 100 young people. America Gunshot: அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு.. டக்லஸ் கவுண்டியில் இருவர் உயிரிழப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/02be827f32ce4badc301c15882cde7b11678080164028589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சனிக்கிழமையன்று அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள டக்ளஸ் கவுண்டியில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துக்கொண்ட, கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.
டக்ளஸ்வில்லி வீட்டில் இருந்து சனிக்கிழமை இரவு 10:30-11:30 மணிக்குள் துப்பாக்கிச் சூடு நடந்ததாக டக்ளஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடந்த மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்றும், எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசாரால் கூறப்பட்டுள்ளது. காவல் துறையினர் கூறுகையில், சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்ததாகவும், மோதல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
சமீபத்தில்தான், லாஸ் ஏஞ்சல்ஸ் மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 10 பேர் உயிரிழந்தனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பயங்கர துப்பாக்கிச்சூட்டில், ஆறு மாத குழந்தை, 17 வயது தாய் உள்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். மத்திய கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. மேலும் கலிபோர்னியாவின் சான் மேடியோ கவுண்டியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
விசாலியா நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோஷன் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து அதிகாலை துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது.
இதேபோல, வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. இதேபோல, 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாகிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.
அதே மாதம், உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 18 வயது இளைஞரால் 19 பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் ஜூலை 4 அணிவகுப்பில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உவால்டே படுகொலைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவற்றை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தகைய தடை, அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.
Indonesia Fire Accident : எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து... 17 பேர் உயிரிழப்பு...!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)