மேலும் அறிய

BJP ADMK Alliance : அண்ணாமலை தான் தலைவர்!அதிமுகவுடன் DEAL OVER..சாதித்து காட்டிய பாஜக

பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி தொடர்ந்துவரும் நிலையில், அண்ணாமலையே தலைவராக தொடர்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அதிமுகவுடன் கூட்டணியும் இருக்கும் என்கிறார்கள். அது எப்படி சாத்தியம் என யோசிக்கிறீர்களா.? வாருங்கள் பார்க்கலாம்.

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவதால், கடந்த ஒரு மாதமாகவே, பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யாராக இருக்கும் என்ற கேள்வி தொடர்ந்துவருகிறது. இதனிடையே, தலைவருக்கான போட்டியில் சீனியர் லீடர்களான தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் குதித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும், அண்ணாமலையே தலைவராக தொடர்வார் என்று ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும், அதிமுக உடன் கூட்டணி வைப்பதாக இருந்தால், அதற்கு அண்ணாமலை சரிப்பட்டு வர மாட்டார் என்பதால், வேறு தலைவரை தான் பாஜக தலைமை நியமிக்கும் என்ற பேச்சுக்களும் வலம் வந்தன. 

இதற்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமியின் மகனிடம் அண்ணாமலை பேசிவிட்டதாகவும், அவரையே அழைத்துச் சென்று அமித் ஷாவை சந்தித்ததாகவும், அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி சமாதானமாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், அதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், அண்ணாமலைதான் பாஜக தமிழ்நாட்டின் தலைராக தொடர்வார் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஆகாததால், அண்ணாமலை மீண்டும் தலைவராகும் பட்சத்தில், அதிமுக உடன் கூட்டணி சேர்வது கடினம் என்று பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த சூழலை பயன்படுத்தவே, மூத்த தலைவர்கள் ரேஸில் குதித்ததாகவும் கூறப்பட்டது. ஏனென்றால், 2026 சட்டமன்ற தேர்தல், இரண்டு கட்சிகளுக்குமே மிக முக்கியமான தேர்தல். அதிலும், அதிமுகவிற்கு வாழ்வா, சாவா என்ற நிலை உள்ளது. இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தால், அதிமுக என்ற கட்சியே காணாமல் போகும் அளவிற்கு சூழ்நிலை உள்ளது. இது, எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றாகவே தெரியும்.

மறுபுறம், கூட்டணி வைக்காவிட்டால், பாஜகவின் நிலை படுமோசமாகிவிடும் என்பதும் பாஜக தலைமைக்கு நன்றாக தெரியும். அதனால், பாஜக-அதிமுக கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயம். இதனிடையே, தற்போது விஜய் வேறு கட்சி தொடங்கி, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடபெற்றுவருவதும் பல சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, அதிமுக உடன் தவெக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. விஜய் உடன் கூட்டணி அமையும் பட்சத்தில், பாஜக-வை அவர் ஏற்பது நடக்காது. இதனால், கூட்டணிகள் அமைவதில் பெரும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், தமிழ்நாட்டில் பாஜக தற்போது வலுவடைந்திருப்பது அண்ணாமலையால் தான் என்று தலைமை நம்புகிறது. அதனால், தலைவரை மாற்றிவிட்டால், அது பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் தலைமையிடம் இருக்கிறது. அதனால், அண்ணமலையையே மீண்டும் தலைவராக்க பாஜக தலைமை முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து சொல்லப்படுகிறது. அதேபோல், மத்தியில் ஆட்சியில் இருப்பதால், அதை வைத்து, எடப்பாடி பழனிசாமியை பணிய வைப்பது ஒன்றும் பாஜகவிற்கு கடினமாக இருக்காது என்று நம்பப்படுவதால், அதிமுக உடனான கூட்டணியும் நிச்சயம் அமையும் என்று கூறப்படுகிறது. கூட்டணி வேண்டும் என்பதால், பாஜக தலைமையே, அண்ணாமலையையும், எடப்பாடி பழனிசாமியையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.

அரசியல் வீடியோக்கள்

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

குஜராத்தில் மாட்டு சாணம் புரட்சி: பெட்ரோலை விட ரூ.20 குறைந்து எரிபொருள்!
குஜராத்தில் மாட்டு சாணம் புரட்சி: பெட்ரோலை விட ரூ.20 குறைந்து எரிபொருள்!
பழனி கோயில் 100 கோடி நில மோசடி: 'குற்றவாளிகளை உடனே கைது செய்!' - சிபிஎம் ஆவேசம்
பழனி கோயில் 100 கோடி நில மோசடி: 'குற்றவாளிகளை உடனே கைது செய்!' - சிபிஎம் ஆவேசம்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திடீரென மாறிய வானிலை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் செம மழை! லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
திடீரென மாறிய வானிலை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் செம மழை! லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
"தொட்டுப் பார்க்க முடியாது.. நான் ரவுடிக்கு ரவுடி.." முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Embed widget