Earthquake: ஜம்மு காஷ்மீர், ஆஃப்கானிஸ்தானில் அடுத்தடுத்து அதிகாலையில் நிலநடுக்கம்: குலுங்கிய கட்டடங்கள்!
இன்று காலையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது
இன்று காலை ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஃபைசாபாத் ஆகிய இடங்களில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவின் எல்லை நாடான ஆஃப்கானிஸ்தான் ஃபைசதாபாத்தில் இன்று காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நடுக்கவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதன் மையமானது, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அள்வுகோலில் 4.3 அளவாக பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் வடக்கு பகுதியில், இன்று காலை 6.57 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நடுக்கவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதன் மையமானது, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அள்வுகோலில் 3.9 அளவாக பதிவாகியுள்ளது.
Earthquake of Magnitude:4.3, Occurred on 05-03-2023, 06:10:37 IST, Lat: 37.72 & Long: 73.48, Depth: 10 Km ,Location: 267km ENE of Fayzabad, Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/pIjaRjmFDR @Indiametdept @ndmaindia @moesgoi @Dr_Mishra1966 pic.twitter.com/bRF8Tm90XG
— National Center for Seismology (@NCS_Earthquake) March 5, 2023
இரண்டும் மிதமான நிலநடுக்கம் என்றாலும், துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில்,இந்த நிலநடுக்கமானது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்:
கடந்த மாதம் பிப்ரவரி 6 ஆம் தேதி துருக்கி- சிரியா எல்லைப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டடங்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகின.
இந்த கட்டட இடிபாடுகளில் பலரும் சிக்கிக்கொண்டனர். அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஐந்து முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பேரழிவில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்த பாதிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
அடுத்தடுத்து புதிய நிலநடுக்கம்
ஒரு வழியாக 2 வார கால மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 21 ஆம் தேதி இரவு 8.04 மணிக்கு மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தகவல்படி, முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 என பதிவானது. இதேபோல் 2வது நிலநடுக்கம் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். இந்நிலையில் இந்த இரண்டு நிலநடுக்கங்களில் உயிர்ப்பலி பதிவானது.
இதையடுத்து, பிப்ரவரி 25ஆம் தேதி மீண்டும் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏறபட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்தததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கமானது, அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.