Australia: ஒரே நாளில் 99 பாருக்கு விசிட்! போதையில் நண்பர்கள் செய்த தவறான காரியம்.. ஆனாலும் கின்னஸ் சாதனை..!
ஒரே நாளில் 99 மதுபான கூடங்களுக்கு (பார்) சென்று மது அருந்தி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு நண்பர்கள் வித்தியாசமான சாதனைப் படைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரே நாளில் 99 மதுபான கூடங்களுக்கு (பார்) சென்று மது அருந்தி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு நண்பர்கள் வித்தியாசமான சாதனைப் படைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் வாழும் அத்தனை விதமான மக்களுக்கும் ஏதோ ஒரு திறமை உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும். அது வெளிப்படும் போதும், அங்கீகரிக்கப்படும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உள்ளூர் தொடங்கி உலகம் வரை சாதனைகள் பலவிதமான அளவில் அங்கீகாரம் செய்யப்படுகிறது. குறிப்பாக உலக சாதனைப் படைக்க வயது வித்தியாசமில்லாமல் பலரும் என்னென்ன பண்ணலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நண்பர்கள் செய்த சாதனை பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்நாட்டின் சிட்னி நகரில் ஹாரி கூரோஸ் மற்றும் அவரது நண்பர் ஜேக் லாய்டர்டன் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். 26 வயதான இந்த இளைஞர்கள் 24 மணி நேரத்தில் 99 பார்களில் சென்று மது அருந்தியுள்ளனர். இதற்காக இந்திய ரூபாய் மதிப்பில் சொல்லப்போனால் ரூ.80 ஆயிரம் செலவு செய்திருக்கிறார்கள் என சொன்னால் நம்ப முடிகிறதா? - ஹாரி கூரோஸ், ஜேக் லாய்டர்டன் ஆகிய இருவரின் இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. மேலும் இதன் மூலம் கடந்தாண்டு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
அந்த சாதனையை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஹென்றிச் டி வில்லியர்ஸ் என்பவர் செய்திருந்தார். அவர் ஒரே நாளில் 78 பார்களில் மது அருந்தியிருந்தார். அதனை ஹாரி கூரோஸ், ஜேக் லாய்டர்டன் ஆகிய இருவரும் முறியடித்து விட்டதாக கின்னஸ் சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சாதனையை செய்ய இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
அதில் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய அரிய வகை நோயான மல்டிபிள் ஸ்களீரோசிஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் எம்.எஸ். ஆஸ்திரேலியா என்ற அமைப்புக்கு நிதி திரட்டி வருகிறார்கள். சிட்னியில் கொரோனா பரவல் காரணமாக அழிந்துபோன இரவு நேர கேளிக்கைக்கு மீண்டும் உயிர் கொடுக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் மிகவும் சுவாஸ்யமான விஷயம் என்னவென்றால், தவறான கணக்கால் 99வது பாருக்கு சென்றபோதே 100வது பாருக்கு சென்றுவிட்டதாக நினைத்து தங்கள் முயற்சியை நிறுத்தியுள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது.
Disclaimer: மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு. குடிப்பழக்கம் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி பலவிதமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மேலும் செய்தியில் கூறப்பட்டுள்ளது போல விபரீத போட்டிகளில் ஈடுபட வேண்டாம்.
மேலும் படிக்க: BSNL E-Auction: முந்துங்கள்: எளிதாக நினைவில் நிற்கும் பி.எஸ்.என்.எல் மொபைல் எண்களின் மின்-ஏலம்