Watch Video: காட்டாற்றிலும் நீச்சலடிக்கும்.. அசால்டாக கரையேறும்.. அதுதான் புலி! வைரல் வீடியோ!!
கெருவா ஆற்றில் புலி ஒன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவது குறித்து முன்னதாக வன அலுவலர் ஒருவர் பகிர்ந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி உள்ளது.
கிட்டத்தட்ட உலகின் 75 விழுக்காடு புலிகள் வாழும் இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆற்றில் தத்தளித்த புலி
புலிகளைப் பாதுகாப்பதிலும் புலிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதிலும் இந்திய வன அலுவலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட பலரும் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
அந்த வகையில் ரமேஷ் பாண்டே எனும் வன அலுவலர் தொடர்ந்து புலிகளைப் பாதுகாப்பதிலும், புலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் பெரும்பங்காற்றி வருகிறார்.
However, tiger being a powerful and great swimmer, could cross the river against the current, and reached in jungles of Katerniaghat, part of Dudhwa Tiger Reserve. pic.twitter.com/cc6ak664dE
— Ramesh Pandey (@rameshpandeyifs) July 22, 2022
இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தின் கெருவா ஆற்றில் புலி ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்படுவது குறித்து ரமேஷ் பாண்டே பகிர்ந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி உள்ளது.
எனினும் பொதுவாக இயற்கையிலேயே சிறந்த நீச்சல் வீரர்களாக புலிகள் விளங்கும் நிலையில், இப்புலி நீந்தி கரையேறும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
A young looking tiger tried to cross Gerua river along the heavy current but flown away upto Girijapuri barrage in Bahraich. Tiger looked in trouble. pic.twitter.com/onDfjtymDL
— Ramesh Pandey (@rameshpandeyifs) July 22, 2022
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில் உள்ள கிரிஜாபுரி தடுப்பணையில் இப்புலி தத்தளித்து கரையேறும் வீடியோ இணையப் பயன்பாட்டாளர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Vikram movie 50th day celebration : ஓடிடியில் வந்தால் என்ன இப்ப! இன்னும் தியேட்டர்களில் நாயகன்தான்! 50 நாளை கடந்தும் வசூலில் விக்ரம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்