இசை நிகழ்ச்சியியோடு கம்போடியா தலைமைச் செயலகத்தில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை!
கம்போடியா நாட்டின் தலைமைச் செயலகத்தில் கலை பண்பாட்டுத் துறை அலுவலக வளாகத்தில் அதன் இயக்குனர் சொரூப் மான்ஸாக் தலைமையில் திருவள்ளுவரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியா நாட்டின் தலைமைச் செயலகத்தில் கலை பண்பாட்டுத் துறை அலுவலக வளாகத்தில் அதன் இயக்குனர் சொரூப் மான்ஸாக் தலைமையில் திருவள்ளுவரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி செவாலியர் வி. ஜி. சந்தோஷம் முன்னிலையில் கம்போடியா பாரம்பரிய இசை நடனத்துடன் வரவேற்கப் பட்டு சிலை திறக்கப்பட்டது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக புதுவை மாநில போக்குவரத்து மற்றும் கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரியங்கா சந்திரகாஷன் பங்கேற்று உரையாற்றினார். அவருடன் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம், விஜிபி ராஜா தாஸ், டாக்டர் தணிகாசலம், ஊடகவியலாளர் பாஸ்கர் ராஜ்குமார் மற்றும் தமிழ்ச் செல்வன் உலகநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விஜிபி உலக தமிழ்ச் சங்கம் தமிழ் சங்கத்தின் 141 திருவள்ளுவர் சிலை கம்போடியாவின் திறப்பு... pic.twitter.com/ZIe1i9t1lp
— V G Santhosam (@VGSanthosam) September 29, 2022
விழா ஏற்பாடுகளை கம்போடியா கலைப் பண்பாட்டுத்துறை, அங்கோர் தமிழ்ச் சங்கம், கம்போடியா தமிழ்நாடு தொண்டு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து சீனிவாச ராவ், தாமரை, ராமேஸ்வரம், ஞானசேகரன் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர்.
அகர முதல என்று தன் குறளினை தொடங்கி மொத்தமாக 1330 குறள்களை தந்து அதன் மூலம் மக்களுக்கு நன்னெறிகளை கொண்டு சென்றவர் தான் திருவள்ளுவர். மக்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதனை தனது 133 அதிகாரரங்கள் மூலம் தெளிவாக பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த உலகிற்கு தெரிவித்து சென்றவர்.
இன்றும் “உலக பொதுமறை” என்று அனைத்து மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்டது திருக்குறள். திருவள்ளுவரது பெயர், பெற்றோர் மற்றும் பிறப்பிடம் ஆகிய அனைத்தும் இன்று வரை உறுதிசெய்யப்படவில்லை. இருந்தாலும் அவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் பிறந்திருக்க கூடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கம்போடியாவில் உலகத் திருக்குறள் மாநாடு மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா https://t.co/RzIaD820WJ
— V G Santhosam (@VGSanthosam) September 29, 2022
மேலும், அவர் தற்போதைய சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்றும் ஒரு தகவல் உண்டு . மேலும் காவேரிபக்கம் பகுதியில் வாழ்ந்த மார்கசெயன் என்பவர் திருவள்ளுவரது கவித்திறனை நேரில் கண்டு பூரித்து தனது மகளான வாசுகியை திருவள்ளுவருக்கு மணமுடித்து தந்ததாகவும் கூறப்படுகிறது.