மேலும் அறிய

Sun Spot: 48 மணிநேரத்தில் அளவில் பத்து மடங்கு அதிகரித்த சூரியனின் சன் ஸ்பாட்!

இரண்டு நாட்களில், சன்ஸ்பாட் அளவில் 10 மடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சூரியனின் மேற்பரப்பில் உள்ள சன்ஸ்பாட் (sunspot AR3085) கடந்த 48 மணிநேரத்தில், அளவு ரீதியாக பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்து வரும் நாசா விண்வெணி ஆராய்ச்சியாளர்கள் (NASA's Solar Dynamics Observatory (SDO)) தெரிவித்துள்ளனர். 

அதிக வெப்பம் காரணமாக சூரியனில் சன்ஸ்பாட் அதாவது வெடிப்புகள் ஏற்படுகின்றன. இப்படி நிகழும்போது, சூரியனின் பிழம்புகள் விண்வெளியில் வெடித்துச் சிதறும். இதற்கு பெயர் ‘Proton flare event'.  இவற்றில் பெரும்பாலனவை அதிக ஆற்றல் கொண்ட புரோட்டான்களாகும். சில சமயங்களில், இவை பூமி உள்ளிட்ட கோள்களின் பரப்பிற்குள் நுழைகிறது.

சன்ஸ்பாட்களால் ஏற்படும் கதிர்வீச்சு விண்வெளியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து SpaceWeather.com என்ற அறிவியல் செய்தி நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பூமியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இது சூரிய பிழம்புகளின் வலிமைக்கு ஏற்ப மாறுபடும் என்று கூறப்படுகிறது.

சன்ஸ்பாட் ஆற்றலுக்கு ஏற்ப அது வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏ - மிகச்சிறியவை. அதைத் தொடர்ந்து பி,சி,எம் மற்றும் எக்ஸ் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 1 முதல் 9 வரையிலான நுணுக்கமான அளவுகளும் உள்ளன. உதாரணமாக சி2 என்பது சி.1-ஐ விட 2 மடங்கு வலிமை கொண்டது.

இந்த AR3085 என அழைக்கப்படும் சன்ஸ்பாட்,  பூமி பரப்பில் இடையூறு விளைவிக்கும் அளவுக்கு வலிமை மிகுந்தது இல்லை  இரண்டு நாட்களில் சன்ஸ்பாட் அளவு ரீதியாக 10 மடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடும் காந்தப்புலம் (magnetic fields) காரணமாக, சன்ஸ்பாட்கள் உருவாகின்றன. இந்த காந்தப்புலக் கோடுகள் திடீரென மாறும்போது, ​​ஆற்றல் மிக்க கதிர்வீச்சு ஃபிளாஷ் வடிவில் வெளியிடப்படுகிறது. இது அதிலிருந்து வெளிபடும் பிழம்புகள் (solar flare) அல்லது  பிளாஸ்மா( cloud of plasma)  coronal mass ejection (CME) ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

சன்ஸ்பாட் அளவு அதிகரித்திருப்பது,  விண்வெளியில் நிலவும் வானிலை மாற்றத்திற்கு எடுத்துக்காட்டுகள். இதனால் நம் பூமிக்கு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் இருக்கின்றன. ஏனெனில், AR3085 சன்ஸ்பாட் பூமியை நோக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நாசா சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்ரியின் தகவலின்படி, ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை,  சி- பிரிவு சன்ஸ்பாட் ஆக இருந்தது. இது பலவீனமான வகையாகும். பொதுவாக, எம்- பிரிவு மற்றும் X-பிரிவு ஃப்ளேயர்கள் மட்டுமே பூமியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை என்று  நேசனல் ஓசனிக் மற்றும் அட்மாஸ்பியரிக் பிரிக்சன் சென்டர்(National Oceanic and Atmospheric Administration's (NOAA) Space Weather Prediction Center (SWPC)) தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க- Asia Cup 2022: விராட் கோலி இதை செய்தால் .. அனைவரும் வாயை மூடுவார்கள்.. முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

மேலும் வாசிக்க- TN TRB Recruitment 2022: 1.80 லட்சம் வரை ஊதியம்; எஸ்சிஇஆர்டி விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget