மேலும் அறிய

Russia Ukraine War : உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா? ரஷிய அதிபர் புதின் பதில்..!

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் காரணமாக உலக நாடுகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், இப்போர் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, அணு ஆயுத பயன்பாடு குறித்து புதின் பேசியது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை கிளப்பி இருந்தது. 

"ஆக்ரோஷமான ரஷிய-விரோதக் கொள்கையில், மேற்குலக நாடுகள் அனைத்து எல்லையையும் மீறிவிட்டன. இது ஒரு முட்டாள்தனம் அல்ல. அணு ஆயுதங்களை வைத்து நம்மை அச்சுறுத்த முயல்பவர்கள், அந்த ஆயுதங்கள் அவர்களை நோக்கி திரும்பிச் செல்லக்கூடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என அணு ஆயுதம் குறித்து புதின் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச்சூழலில், வியாழக்கிழமை அன்று தான் தெரிவித்த முந்தைய கருத்துக்கு நேர் எதிராக புதின் பேசியுள்ளார். உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் எண்ணம் இல்லை எனக் கூறிய அவர், உலகத்தில் ஆதிக்கத்தை செலுத்த மேற்குலக நாடுகள் முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

சர்வதேச வெளியுறவு கொள்கை நிபுணர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பேசிய புதின், "உக்ரைனை அணு ஆயுதங்களை கொண்டு ரஷியா தாக்குவது அர்த்தமற்றது. அதற்கான தேவை இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். அரசியல் தேவையும் இல்லை. இராணுவத் தேவையும் இல்லை.

ஆபத்தான, ரத்தக்களரி நிறைந்த அசிங்கமான ஆதிக்க விளையாட்டில் மற்ற நாடுகளின் மீது தங்கள் விதிமுறைகளை திணிக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முயற்சிக்கின்றன" என்றார்.

உலகம் ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது. மேற்குலக நாடுகள் இனி மனிதகுலத்திற்கு அதன் விருப்பத்தை ஆணையிட முடியாது. ஆனால், அதைச் செய்ய முயற்சிக்கின்றன. மேலும் பெரும்பான்மையான நாடுகள் அதை இனி பொறுத்துக்கொள்ள விரும்பவில்லை. மேற்கத்திய கொள்கைகள் மேலும் குழப்பத்தை தூண்டும். மேலும், காற்றை விதைப்பவன் சூறாவளியை அறுவடை செய்வான்.

ரஷியா, மேற்கத்திய நாடுகளின் எதிரி அல்ல. ஆனால் மேற்கத்திய நவ-தாராளவாத உயரடுக்கின் உத்தேச கட்டளைகளை தொடர்ந்து எதிர்க்கும். அவர்கள் ரஷியாவை அடிபணியச் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களின் இலக்கே ரஷியாவை பாதிப்புக்குள்ளாவதுதான். அவர்களின் புவிசார் அரசியல் பணிகளை நிறைவேற்றுவதற்கான ஒரு கருவியாக மாற்றுவது அவர்களின் குறிக்கோள். அவர்கள் அதை அடையத் தவறிவிட்டனர். அவர்கள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள்" என்றார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
Revanth Reddy: ”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
Embed widget