மேலும் அறிய

Queen Elizabeth: உலகப்புகழ்.. தன்னடக்கம்..யார் இந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத்..?

லண்டனில் உள்ள மேஃபேரில் 1926 ஏப்ரல் 21ம் தேதி ஆறாம்  ஜார்ஜ் அரசருக்கும், எலிசபெத் மகாராணிக்கும் மகளாகப் பிறந்தவர் தான் எலிசபெத் அலெக்ஸாண்டரா மேரி.

உலகம் முழுவதும் இருக்கும் அரச குடும்பங்களில் மிகப்பெரும் மரியாதை கொண்ட குடும்பமாக பார்க்கப்படுகிறது இங்கிலாந்து அரச குடும்பம். உலகின் சுமார் 25% நிலப்பரப்பை ஆண்ட குடும்பத்தின் ஆளுகையில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் சுதந்திரம் பெற்றுவிட்டாலும், வேல்ஸ், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகள் இன்னும் இங்கிலாந்து அரசகுடும்பத்தின் ஆளுகைக்கு கட்டுப்பட்டே இருக்கின்றன.

இந்த நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரச குடும்பத்தின் மகாராணி தான் இரண்டாம் எலிசபெத். தற்போது தான் இங்கிலாந்து பிரதமர் தேர்தல் முடிந்து புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டதும் கடந்த செவ்வாய்க் கிழமை தான் மகாராணி எலிசபெத்தை நேரில் சந்தித்திருந்தார். இருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்போது தான் பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால், இந்த நொடி மகாராணி எலிசபெத் உயிரோடு இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக தான் இருக்கிறது.

Queen Elizabeth: உலகப்புகழ்.. தன்னடக்கம்..யார் இந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத்..?

கடந்த ஜூலை மாதம் முதல் தமது ஸ்காட்லாந்து இல்லத்தில் கோடை விடுமுறையில் இருந்தார் எலிசபெத்.  தனது 70 வருட ஆளுகையில், புதிய பிரதமராக நியமிக்கப்படுபவரை பக்கிங்காம் அரண்மனையில் சந்திப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், லிஸ் ட்ரஸ்ஸை ஸ்காட்லாந்தில் வைத்து பார்த்தபோதே அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அரசல் புரசலாகப் பேசப்பட்டது. பொதுவாக இங்கிலாந்து ராணி உடல் நலம் பற்றிய தகவல்கள் வெளியில் சொல்லப்படாது என்றாலும், பால்மோரல் கோட்டையில் உள்ள ராணியின் உடல்நிலை குறித்து வெளியான மருத்துவ அறிக்கை அதை உறுதி செய்தது. இந்த நிலையில் தான் அவர் உயிரிழந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அரசு.

லண்டனில் உள்ள மேஃபேரில் 1926 ஏப்ரல் 21ம் தேதி ஆறாம்  ஜார்ஜ் அரசருக்கும், எலிசபெத் மகாராணிக்கும் மகளாகப் பிறந்தவர் தான் எலிசபெத் அலெக்ஸாண்டரா மேரி. தனது தாய், பாட்டி மற்றும் கொள்ளுப்பாட்டியின் பெயர்களை சேர்த்து, இந்த பெயர் வைக்கப்பட்டது. அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் வீட்டிலேயே கல்வி பயின்றார் எலிசபெத். ஜார்ஜ் 1936ல் அரசரானபோதே இவரும் அரசகுடும்பத்தைச் சேர்ந்த வாரிசானார். இரண்டாம் உலகப்போரிலும் பங்காற்றினார். எடின்பரோவின் கோமகனாக இருந்த பிலிப்பை 1947ல் திருமணம் செய்துகொண்டார் எலிசபெத்.  இவர்களுக்கு சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு என்று நான்கு பிள்ளைகள் உள்ளனர்.  இவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் அரசர் உயிரிழக்க, ஐக்கிய ராஜ்ஜியத்தின் மகாராணியாக 1952ல் பொறுப்பேற்றுக்கொண்டார் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25 தான். அவர் மகாராணியாக பதவியேற்றபோது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் உலகப்புகழ்பெற்ற வின்ஸ்டன் சர்ச்சில். அவருக்குப் பிறகு சர் ஆண்டனி ஈடன் முதல் தற்போதைய லிஸ் ட்ரஸ் வரை தன் வாழ்நாளில் 15 பிரதமர்களைப் பார்த்திருக்கிறார் எலிசபெத். 

Queen Elizabeth: உலகப்புகழ்.. தன்னடக்கம்..யார் இந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத்..?

என்னதான் மக்களாட்சி வந்துவிட்டாலும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் எலிசபெத் மகாராணியும் அங்கம் வகித்திருக்கிறார். ஐக்கிய ராஜ்ஜியத்தை அதிக காலம் ஆட்சி செய்தவர் இவரே. இதற்கு முன் விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்த நிலையில், 70 ஆண்டுகள் ஆட்சி செய்து சாதனை படைத்திருக்கிறார். 70வது ஆண்டையொட்டி பிளாட்டினம் ஜூப்லி கொண்டாட்டங்கள் இரு மாதங்களுக்கு முன்புதான் விமரிசையாக நடைபெற்றது.

உலகில் உள்ள அரச குடும்பங்களில் நீண்ட ஆண்டுகள் அரசாட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் என்றால் சும்மாவா? தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ் 1927 முதல் 2016 வரை சுமார் 70 ஆண்டுகளைக் கடந்து ஆட்சி செய்திருக்கிறார். அதனை தான் முறியடித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் எலிசபெத். இன்னும் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், 1643 முதல் 1715 வரை ஆண்ட பிரான்ஸ் அரசர் பதினான்காம் லூயிஸை முறியடித்து முதலிடம் பெற்றிருக்கலாம். ஆனால், காலமும் வயோதிகமும் இரண்டாம் எலிசபெத்துக்கு வழங்கவில்லை.

ஆனால் என்ன. 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி  அரசி,  54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிட்டிஷாரால் ஆளப்பட்ட காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் பொறுப்பு, பிரிட்டன் திருச்சபையின் மிக உயரிய கவர்னர் பொறுப்பு, பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதில் முக்கிய பொறுப்பு என்று உச்ச அதிகாரம் கொண்டவராகவே உயிரை விட்டிருக்கிறார். கடந்த ஆண்டு தான் இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் தனது 99வது வயதில் உயிரிழந்தார். அவரது நூறாவது ஆண்டில் எலிசபெத்தும் உயிரிழந்துவிட்டார். இவர்களது மூத்த மகன் சார்லஸ் அடுத்த அரசராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. 

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் சூரியன் அஸ்தமனம் இருக்காது என்று கூறுவார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு பரந்து விரிந்திருந்தது அவர்களது ராஜ்ஜியம். அந்த காலகட்டத்தில் ஆட்சிக்கு வந்த எலிசபெத்தின் காலமும் அஸ்தமித்திருக்கிறது. அஸ்தமித்தது எலிசபெத் மகாராணியின் மட்டுமல்ல. ஒரு சகாப்தமும் தான்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget