அமைதிக்கான நோபல் பரிசு... எதற்கு வழங்கப்படுகிறது... முக்கியத்துவம் என்ன?
அறிவு, அறிவியல் மற்றும் மனிதநேயம் மூலம் சமுதாயத்தை மேம்படுத்தி மக்களுக உதவ முடியும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.
கடந்த 1901ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் (டைனமைட்டைக் கண்டுபிடித்தவர்) ஆல்பிரட் நோபல், மனித இனத்திற்கு மிக பெரிய சேவையாற்றிவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என நினைத்தார்.
அறிவு, அறிவியல் மற்றும் மனிதநேயம் மூலம் சமுதாயத்தை மேம்படுத்தி மக்களுக உதவ முடியும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.
இதன் காரணமாகவே, இது உலகின் பெருமை மிகு பரிசாக கருதபடுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசை வழங்குவதற்காகவே தனது சொத்தின் பெரும் பங்கினை ஆல்பிரட் நோபல் விட்டு சென்றார்.
1968 ஆம் ஆண்டில், ஸ்வீடனின் மத்திய வங்கியால் பொருளாதாரத்திற்கான பரிசு வழங்கப்பட்டது. இருப்பினும் அது நோபல் பரிசாகக் கருதப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பிரிவிலும் வெவ்வேறு நிறுவனங்கள் பரிசுகளை வழங்குகின்றன. ஆறு பேரில் ஐந்து பேருக்கு ஸ்வீடனிலும், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும் வழங்கப்படுகிறது.
கல்வியாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், முந்தைய வெற்றியாளர்கள் என பலர் பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். பரிசு வென்றவர்கள் லாரியட்ஸ் (laureates) என்று அழைக்கப்படுகிறார்கள். பண்டைய கிரேக்கத்தில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் லாரல் மாலையை இது குறிக்கிறது.
ஒரே பிரிவில் மூன்று பேருக்கு வரை நோபல் பரிசுகளை வழங்கலாம். சில ஆண்டுகளில் பரிசு வழங்கப்படாமலும் இருந்துள்ளது. குறிப்பாக, இரண்டு உலகபோர் நடைபெற்ற சமயத்தில் பரிசுகள் வழங்கப்படவில்லை. நோபல் அறக்கட்டளை விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட பிரிவில் யாரும் பரிசுக்கு தகுதியற்றவர்கள் என கருதப்பட்டால், அது வழங்கப்படாமல் இருக்கலாம். அதன் பரிசுத் தொகை அடுத்த ஆண்டில் கொடுக்கப்படும்.
எதற்காக வழங்கப்படுகிறது?
நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல், ராணுவத்தை குறைத்தல், அமைதியை நிலைநாட்டுதல் ஆகியவைக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஒஸ்லோவில் வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.
2022ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவின் alt news செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரதிக் சின்ஹா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் தூதரக உறவை மேம்படுத்தியதற்கும் மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அசாதாரண முயற்சிகளை எடுத்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மற்ற குறிப்பிடத்தக்க வெற்றியாளர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் (2002); குழந்தை கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆர்வலர் மலாலா (2014 பகிரப்பட்டது); ஐரோப்பிய ஒன்றியம் (2012); ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் அப்போதைய பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் (2001 பகிரப்பட்டது ); மற்றும் புனித தெரசா (1979) ஆகியோரும் அடங்குவர்.