Netherland Beach: கடற்கரையில் இனிமே 'அப்படி' பண்ணக்கூடாது.. மக்களுக்கு நெதர்லாந்து அரசு அதிரடி உத்தரவு..!
இதுவரை பொது வெளியில் உடலுறவு வைப்போரிடம் வெறும் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Netherland Beach: இதுவரை பொது வெளியில் உடலுறவு வைப்போரிடம் வெறும் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
புகார்
நெதர்லாந்து நாட்டில் உள்ள வீரே என்ற நகரில் உள்ள ஒரு கடற்கரையில் சில ஜோடிகள் அனைவருக்கும் முன்பே உடலுறவு வைத்துக் கொள்கின்றதாக புகார்கள் எழுந்தது. இப்படி அடிக்கடி இளம் வயது ஜோடிகள் பாலியல் உறவில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதுவும் சிலர் முன்கூட்டியே தயார் நிலையில் வந்து கூட கடற்கரையில் உடலுறவு வைத்துக் கொள்கிறனர்.
மேலும், கடற்கரைக்கு அருகே இருக்கும் சிறு குன்றுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. அதேநேரம் கடற்கரையில் நிர்வாணமாக சன் பாத் எனப்படும் சூரிய குளியல் எடுப்பவர்களும் உடலுறவு வைத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபோன்ற பொது இடத்தில் செய்து வருவது, பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகர நிர்வாகம் கடற்கரையில் உடலுறவு வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வரும் அளவுக்கு இந்த பிரச்சனை மோசாமாகிவிட்டது.
கடும் நடவடிக்கை
இந்த குறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததால் நெதர்லாந்து அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடற்கரையில் இளம் ஜோடிகள் உடலுறவு வைத்துக் கொள்வதை தடுக்கும் விதமான எச்சரிக்கை பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரையில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொது வெளியில் உடலுறவு வைப்போர்களிடம் வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது வீரே நகர் கடற்கரை முழுவதும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நெதர்லாந்து நாட்டின் வீரே நகரில் கடற்கரையில் உடலுறவு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
NFN Open en Bloot (Open and Bare) நிர்வாண பொழுதுபோக்கு சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”கடற்கரையில் உடலுறவு வைத்துக் கொள்வது பொழுதுபோக்கல்ல. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சன் பாத்க்கு வருபவர்கள் இதுபோன்ற உடலுறவு வைத்துக் கொள்வது இல்லை. கடற்கரையில் நிர்வாணமாக குளிப்பதும், உடலுறவு வைத்துக் கொள்வதும் சுதந்திர உணர்வை தருவதோடு, நல்ல ஆரோக்கியதிற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இருந்தாலும், பொதுவெளியில் உடலுறவு கொள்வதற்கு எங்களுக்கு தொடர்பு இல்லை" என்று தெரிவித்தார்.
"யாருக்கு என்ன பிரச்சனை”
இதுகுறித்து நெதர்லாந்து பாலியல் நிபுணர் யூரி ஓல்ரிச்ஸ் கூறுகையில், ”உலகில் பல நாடுகளில் பழமைவாத மாறததால், உடலுறவு மற்றும் நிர்வாணம் குறித்து யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை. அப்படி பேசுவரை அந்தந்த நாட்டில் இருப்பவர்கள் ஒடுக்கி வருகின்றனர். அந்த நிலைதான் தற்போது நெதர்லாந்து பொதுவெளியில் உடலுறவு செய்ய தடை விதித்துள்ளது. இப்படி பொது இடத்தில் உடலுறவு கொள்வதால் யாருக்கு தொந்தரவாக இருக்கிறது என்று புரியவில்லை" என்று தெரிவித்தார்.