கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியில் அமெரிக்கா புதிய சாதனை
புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் அரசு தடுப்பூசி வழங்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது
உலக அளவில் ஓர் ஆண்டிற்கு மேலாக கொரோனாவின் தாக்கம் இருந்துவருகின்றது. கொரோனா பரவளின் புதிய அலை முன்பைவிட அதிகமாக உள்ளது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, அதை வழங்கும் பணி உலக அளவில் தொடங்கப்பட்டுள்ளதால் மக்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியில் அமெரிக்கா புதிய சாதனையை படைத்துள்ளது.
அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் அரசு தடுப்பூசி வழங்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெள்ளைமாளிகையை சேர்ந்த டாக்டர் சைரஸ் ஷாப்பர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காகவிலும் பெருந்தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அங்கு இதுவறை 10 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 5 கோடிக்கும் அதிகமானோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.