மேலும் அறிய

Princess Kate: இங்கிலாந்து இளவரசிக்கு புற்றுநோய்! வைரலான வீடியோவில் உண்மை இல்லையா? அப்போ டீப் பேக்கா?

இங்கிலாந்து இளவரசரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான வீடியோ டீப் பேக் என்று பலரும் கூறி வருகின்றனர்.

மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏஐ கருவிகள் நிச்சயம் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. 

என்னாது அது ஏஐ வீடியோவா?

அதிலும், சமீப காலமாக டீப் பேக் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.  இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளில் இந்த பிரச்சினை அதிர்வலைகளை கிளப்பி வருகிறது.  இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். இதனை டீப் பேக் என்று நெட்டிசன்கள் பலரும்  கூறி வருகின்றனர். 

தனக்கு புற்றுநோய் பாதிப்பு காரணமாக  கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் வீடியோ மூலம் தெரிவித்தார். இந்த  வீடியோவில் நீல சட்டை அணிந்து, பார்க்கில் அமர்ந்தபடி இளவரசி கேத் மிடில்டன் பேசியிருக்கிறார். இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் பலரும் டீப் பேக் வீடியோ என்று கூறுகின்றனர்.

இந்த வீடியோவில் எந்த ஒரு அசைவும் இல்லை எனவும், இளவரசி கேத் மிடில்டனும் தலை, கை அசைவு எதுவுமின்றி  பேசியுள்ளதாகவும் நெட்டிசன்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். எனவே, இது டீப் பேக்  வீடியோவாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.  இருப்பினும், இந்த வீடியோ குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. 

என்னாச்சு இங்கிலாந்து இளவரசிக்கு?

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு கீமோதெரபி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். அதன்படி தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன்.

எங்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்த நோய் பாதிப்பு குறித்த தகவலை வெளியிடாமல் இருந்தோம். புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்த போது எனக்கும் வில்லியம்ஸூக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மேலும் ஜனவரி மாதம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் உடல் நலம் மீண்டு வர நீண்ட காலம் ஆனது.

அதனால் புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற முடியவில்லை. தற்போது சிகிச்சை தொடங்கியுள்ள நிலையில் எங்கள் குழந்தைகளிடம் இப்பிரச்சினையை புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் தற்போது நலமாக இருக்கிறேன். நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர கவனம் செலுத்தி வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் உடலளவிலும், மனதளவிலும் வலுப்பெற்று வருகிறேன்” என கேத் மிடில்டன் கூறியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது டீப் பேக் என்று நெட்டிசன்கள் இணையத்தில் கூறிவருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Embed widget