Myanmar : மாணவர்கள் தேர்வுக்கு தயாராக உதவிட, மியான்மர் அரசு கொண்டுவந்த அதிரடி..
Mayanmar : மியான்மர் நாட்டில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சார சேவைகளுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சார சேவைகளுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021- ஆம் ஆண்டில் மியான்மரில் இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பொருளாதார ரீதியிலாகவும் சரிவைக் கண்டு வருகிறது. குறிப்பாக மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கே அல்லல்படும் நிலையே மியான்மரில் தொடர்கிறது.
நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வேளையில், அங்குள்ள மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான யாகான் மின் உற்பத்தி கழகம் (Yangon Electricity Supply Corporation) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் சேவையில் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் மாணவர்களுக்கு தேர்வு நடப்பதால் அவர்கள் தயாராவதற்காக இரவு வேளைகளில் அவர்களுக்கு முழு நேரமும் மின்சாரம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக ரீதியிலான மின்சார பயன்பாட்டிற்கு கட்டுபாடுகள்
கடும் மின் தட்டுப்பாடு நிலவும் நிலையில், தொழில்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரம் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 20-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் சேவை நிறுத்தம் என்பது மியான்மர் நாட்டு மக்களுக்கும் ஒன்றும் புதிதானது அல்ல. ஆனால், மின்சார தட்டுப்பாடு காரணமாக யங்கோன் உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
மேலும், நாட்டில் மின்சார உற்பத்திக்காக உதவ முன்வந்த சர்வதேச நிறுவனங்களும் இன்னும் தங்களது முடிவை சரியாக சொல்லவில்லை. இதனால், மியான்மர் அரைநாள் மின்சார சேவை இல்லாமல்தான் இருக்கும். அப்படியிருக்கையில், மாணவர்களின் கல்விக்காக இப்படியான முடிவு அறிவிக்கப்பட்டிருப்பதை சிலர் ஆதரித்தும், எதிரான கருத்துக்களையும் சொல்லி வருகின்றனர்.
யாங்கோன் மக்கள் தண்ணீருக்காக தினமும் நீண்ட வரிசையில் காத்திருப்பது, ஒரு நாளில் 10 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறைக்கு பழகியிருக்கின்றனர் என்பதே உண்மை.
இந்த நெருக்கடி குறித்து மியான்மர் மக்கள் ஒருவர் கூறுகையில், “சமைப்பதற்கு நிலக்கரி அடுப்பை பயன்படுத்துகிறோம். ஆனால், தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது.” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க..