முன்னாள் காதலி ஹேண்ட்பேக்கில் சிறுநீர் கழித்த நபர்! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
அவரை ஏமாற்றுவதற்காக சிறுநீர் கழிப்பது போல் நடித்ததாக அதிகாரிகளிடம் கூறினார். இருப்பினும், தேசிய தடய அறிவியல் நிறுவனம் பையின் உட்புறத்தில் இருந்து மாதிரிகளை பரிசோதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது முன்னாள் காதலியின் லூயி விட்டன் பிராண்ட் ஹேண்ட்பேகில் சிறுநீர் கழித்த நபருக்கு 1.5 மில்லியன் தென் கொரிய வோன் (ரூ. 90,000) வழங்க சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குவாதம்
கடந்த ஆண்டு அக்டோபரில் தென் கொரியாவின் சியோலைச் சேர்ந்த நபர் தனது காதலியுடன் கங்கனம்-குவில் உள்ள அவரது வீட்டில் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த பெண் நிறைய பணம் செலவழிக்கிறார் என்றும், அவரது கடன் பெருகிக்கொண்டே போவது பற்றியும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹேண்ட்பேகில் சிறுநீர் கழிப்பு
சண்டை நடைபெறும்போது ஒரு கட்டத்தில், அந்த நபர் படுக்கையறைக்குள் சென்று தனது காதலியின் லூயி விட்டன் ஹேண்ட் பேக்கை வெளியே கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. எடுத்து வந்து உடனடியாக அந்த பையின் மீது சிறுநீர் கழிக்க தொடங்கியுள்ளார்.
தடய அறிவியல் ஆய்வு
இந்த சம்பவம் குறித்து அவரது முன்னாள் காதலி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்த நபர் முதலில் அவரது குற்றச்சாட்டுகளை மறுத்தார், அவரை ஏமாற்றுவதற்காக சிறுநீர் கழிப்பது போல் நடித்ததாக அதிகாரிகளிடம் கூறினார். இருப்பினும், தேசிய தடய அறிவியல் நிறுவனம் பையின் உட்புறத்தில் இருந்து மாதிரிகளை பரிசோதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனை முடிவுகள்
அந்த நபர் பிரச்சினைகள் முடிந்த உடன், பைக்குள் வாசனை திரவியத்தை ஊற்றி தனது சிறுநீர் நாற்றத்தை மறைக்க முயன்றுள்ளார். தடய ஆய்வு சோதனை முடிவுகள் அதில் சிறுநீர் இருப்பதை கண்டறிந்தது மட்டுமின்றி அது அவருடைய டிஎன்ஏ உடன் ஒத்துப்போகிறது என்றும் கண்டறிந்தனர். அந்த நபர் தனது செயல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதன் பிறகு முன்னாள் காதலி இழப்பீடு கேட்டு அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்படி சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம், சிறுநீர் கழித்து வீணாக்கப்பட்ட டிசைனர் கைப்பைக்கு இழப்பீடாக 1.5 மில்லியன் வோன் வழங்குமாறு அந்த நபருக்கு உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவரின் முதல் குற்றம் என்பதால், மென்மையான தண்டனை தேர்வு செய்யப்பட்டதாக நீதிபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.