Indonesian Presidents' Daughter Into Hinduism | ஹிந்து மதத்துக்கு மாறினார், முதல் இந்தோனேசிய அதிபரின் மகள்..
இந்தோனேசியா நாட்டின் முதல் அதிபரான சுகர்னோவின் மகள் சுக்மாவதி தன்னுடைய 70-ஆவது வயதில் இந்து மதத்திற்கு மாறியுள்ளார்.
இஸ்லாம் மதம் தழைத்தோங்கி இருக்கும் இந்தோனேசியா நாட்டின் முதல் அதிபர் சுகர்னோ. இவரது மூன்றாவது மனைவிக்கு பிறந்த மகள் சுக்மாவதி. இவர் இந்து மதத்திற்கு மாற இருப்பதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
அதன்படி அவர் நேற்று தனது 70-ஆவது பிறந்தநாளில் இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார். 'சுதி வதனி’ என்ற பெயரில் பாலியில் நடந்த மதம் மாறும் நிகழ்ச்சியில் அவர் இந்து மதத்திற்கு மாறினார். இந்து மதம் பாலினீஸ் மக்களுக்கு நெருக்கமானதாக இருக்கிறது என சுக்மாவதி கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தை விமர்சித்து சுக்மாவதி கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அவருக்கு எதிராக இஸ்லாமிய குழுக்கள் போராட்டத்தை முன்னெடுத்தன.
இதனையடுத்து, ”இந்தோனேசியாவின் அனைத்து இஸ்லாமியர்களிடமும், குறிப்பாக கவிதையால் மனது புண்பட்டவர்களிடமும் என் மனதின் ஆழத்திலிருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று சுக்மாவதி கூறினார். ஆனால், இந்தோனேசிய உலமா பாதுகாப்பு அணியினர் (TPUI) மற்றும் இந்தோனேசிய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினர் (GMII) அவரது மன்னிப்பை ஏற்க மறுத்து, சுக்மாவதி எழுதிய கவிதைக்காக அவர் நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டுமென கூறினர்.
இதனால் சுக்மாவதி கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதனைத் தொடர்ந்தே சுக்மாவதி சுகர்னோபுத்திரி இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.
சுக்மாவதி கஞ்ஜெங் குஸ்தியை திருமணம் செய்துகொண்டார். ஆனால் 1984ஆம் ஆண்டு இருவருக்கும் விவகாரத்து ஆனது. இதனையடுத்து சுக்மாவது தனது அரசியல் பயணத்தை இந்தோனேசிய தேசிய கட்சியிலிருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: துக்ளக் குருமூர்த்திக்கு நெருங்கும் பிடி? : அதிமுக ஆட்சியில் பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற்றார் தலைமை வழக்கறிஞர்
Amazon Festival Sale: அமேசான் அதிரடி தள்ளுபடி.. ரூ.8000-க்குள் நச்சுனு 5 ஸ்மார்ட்போன்ஸ்.!
'இந்து பாரம்பரிய மாதம்' - அக்டோபர் மாதத்தை சிறப்பிக்கும் அமெரிக்கா!
Watch Video: சிரிச்சு சிரிச்சு முடியல... வான்கோழிகளுக்கு மத்தியில் ரிப்போர்ட் செய்த செய்தியாளர்!
வண்டுக்கு கொரோனா என பெயர் வைத்த விஞ்ஞானிகள்... கொஞ்சம் ஓவராதான் பன்றாங்க!