Watch Video: சிரிச்சு சிரிச்சு முடியல... வான்கோழிகளுக்கு மத்தியில் ரிப்போர்ட் செய்த செய்தியாளர்!
வான் கோழிகள் நிறைந்த ஒரு களத்திலிருந்து ஒரு செய்தியைக் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
நம் அனைவரின் வாழ்க்கையிலும் காமெடி இன்றியமையாதது மற்றும் தவிர்க்க முடியாதது. எதிர்பாராத சம்பவங்கள், எதிர்பாராத நேரங்களில் நமக்கு சிரிப்பை வரவழைக்கும். சீரியசான தருணங்களில்கூட அடக்க முடியாத சிரிப்பை வெளிப்படுத்திவிடுவோம். அப்படித்தான் செய்தியாளர் ஒருவருக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
சிஎன்என்-ஐ சேர்ந்த செய்தியாளர் அன்னா ஸ்டூவர்ட். வான் கோழிகள் நிறைந்த ஒரு களத்திலிருந்து ஒரு செய்தியைக் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த காமெடி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அதுகுறித்த வீடியோவை அன்னா ஸ்டூவர்ட் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். வான் கோழிகளுக்கு மத்தியில் நின்று ரிப்போர்ட் செய்துகொண்டிருந்தபோது பின்னால் இருந்த வான்கோழி எதிர்பாராதவிதமாக அவரைக் கொத்தியது. அப்போது தனது ரிப்போர்ட்டிங்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு சிரிக்கிறார் அன்னா. அவருடன் வான்கோழிகளும் கத்துகின்றன. வான்கோழிகளின் சத்தம், அவை அன்னாவுடன் சேர்ந்து சிரிப்பது போல நமக்கும் கேட்கிறது.
இதையும் படிக்க:
அதிமுக மாஜி அமைச்சர்கள் க்ரிப்டோ கரன்ஸியில் முதலீடா? அடுத்த ஸ்விஸ் வங்கியா க்ரிப்டோ கரன்ஸி!
“வான்கோழிகளுக்கு சிரிப்பது ரொம்ப பிடிக்கும் போல” என்ற கேப்ஷனுடன் அவர் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அன்னாவின் ட்விட்டர் பக்கத்தில் மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.
Turns out what turkeys REALLY like is a good laugh, at my expense. Sound up…
— Anna Stewart (@annastewartcnn) October 19, 2021
No shortage of outtakes today at @KellyBronze Farm. pic.twitter.com/8XSpr6kJtx
இந்த வீடியோவைப் பகிர்ந்த நெட்டிசன்கள் நிருபரின் தைரியம் மற்றும் உறுதிக்காக பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும் சிலர் தங்கள் நாளை சிரிப்புடன் தொடங்க இந்த வீடியோ உதவியது என்றும் தெரிவித்தனர். சிரிப்பிற்கான காரணங்களைத் தேடாமல் நம் வாழ்வில் ஒவ்வொரு சம்பவங்களிலும் நிறைந்திருக்கும் காமெடிகளை உணர வேண்டும். அதுதான் உடல் நலத்தையும் மனநலத்தையும் பாதுகாக்கும் என்றும் கூறி பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்