TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
TVK Vijay Condemned Amitshah: அம்பேத்கர் பெயரை, உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என தவெக தலைவர் விஜய் , மத்திய அமைச்சர் அமித்சாவைக் கண்டித்துள்ளார்.
அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை வன்மையாக கண்டிக்கிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அமித்சா சர்ச்சை பேச்சு:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா, நேற்றைய தினம் அம்பேத்கர் குறித்து பேசியது, பெரிதும் சர்ச்சையானது. அமித்சா தெரிவித்திருந்ததாவது, “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என சொல்வது, தற்போது ஃபேசனாகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா பேசியிருந்தார்.
அமித்சாவின் இந்த பேச்சானது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தனர். மேலும், நாடாளுமன்றத்திலும் , எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் பெயர் பதிக்கப்பட்ட பலகையை அணிந்தும் கோசங்கள் எழுப்பினர்.
தவெக விஜய் கண்டனம்:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, “ யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்;
அம்பேத்கர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.
யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
— TVK Vijay (@tvkvijayhq) December 18, 2024
அம்பேத்கர்...
அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும்…