Indonesia Earthquake: இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! பீதியில் மக்கள்..
இந்தோனேசியாவில் ஜாவாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டில் ஜாவாவில், இன்று மாலை 3.19 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 100 கி.மீ ஆழத்தில் உருவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Earthquake of Magnitude:6.0, Occurred on 03-12-2022, 15:19:37 IST, Lat: -8.01 & Long: 107.24, Depth: 100 Km ,Location: Java, Indonesia for more information Download the BhooKamp App https://t.co/LnhBu869Dj@Indiametdept
— National Center for Seismology (@NCS_Earthquake) December 3, 2022
@Dr_Mishra1966
@ndmaindia
@DDNational pic.twitter.com/1o73SL5nh0
மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மேலும் கருட் நகரில் ஒருவர் காயமடைந்ததுடன், நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மேற்கு ஜாவாவில் உள்ள மற்ற நகரங்களில் வசிக்கும் சிலர் இந்த நிலநடுக்கத்தை தாங்கள் வலுவாக உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.
கடந்த மாதம், மேற்கு ஜாவாவின் சியாஞ்சூரில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை நிலநடுக்கம் மிகவும் ஆழமாக இருப்பதால், அதன் தாக்கம் சியாஞ்சூரைப் போல மோசமாக இல்லை என்று கூறப்படுகிறது.
View this post on Instagram
Also Read: DELHI EARTHQUAKE: பரபரப்பு.. டெல்லியில் லேசான நிலநடுக்கம்.. வீதிக்கு ஓடிவந்த மக்கள்..
Also Read: Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: 160-ஐ கடந்தது பலி எண்ணிக்கை