மேலும் அறிய

காரில் வைத்து கொல்லப்பட்ட இந்திய மாணவர்! கனடாவில் தொடரும் மர்மம் - என்னதான் நடக்கிறது?

கனடா தெற்கு வான்கூவரில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கனடாவில் முந்தைய காலங்களை ஒப்பிடும்போது கடந்த 3 ஆண்டுகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருமளவும் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆங்காங்கே நடைபெறும் குற்ற சம்பவங்கள் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறுகிறது.

குறிவைக்கப்படுகிறார்களா கனடா வாழ் இந்தியர்கள்?

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒட்டாவாவில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். சமீப காலமாக, கனடா வாழ் இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இப்படியான நிலையில், மீண்டும் அங்கு ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று கனடா வாழ் இந்தியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு வான்கூவரில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வான்கூவர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "ஏப்ரல் 12 ஆம் தேதி, இரவு 11 மணியளவில் கிழக்கு 55வது அவென்யூ மெயின் ஸ்ட்ரீட்டில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து, அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

காரில் இந்திய மாணவர் மர்ம மரணம்:

சம்பவ இடத்திற்கு சென்றபோது, அப்பகுதியில் சிராக் அன்டில் (24) என்பவர் வாகனத்திற்குள் இறந்து கிடந்தார். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றார். சிராக் அன்டிலின் சகோதரர் ரோனிட் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காலையில் தொலைபேசியில் பேசியபோது சிராக் மகிழ்ச்சியாகத் தெரிந்தார். பின்னர், வெளியில் செல்ல வேண்டும் என கூறிவிட்டு தனது ஆடி காரை எடுத்து சென்றார். அப்போதுதான், அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்" என்றார். கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை செய்யும்படி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கம் கேட்டு கொண்டுள்ளது.

எக்ஸ் தளத்தில் தேசிய மாணவர் சங்க தலைவர் வருண் சௌத்ரி இது தொடர்பாக வெளியிட்ட பதிவில், "கனடாவின் வான்கூவரில் சிராக் அன்டில் என்ற இந்திய மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவசர கவனம் தேவைப்படுகிறது.

விசாரணையின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து நீதி விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்துகிறோம். மேலும், இந்த கடினமான நேரத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

சிராக் ஆண்டிலின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக அவரது குடும்பத்தினர் க்ரவுட் ஃபண்டிங் தளமான GoFundMe மூலம் பணம் திரட்டி வருகின்றனர். கடந்த 2022ஆம் செப்டம்பர் மாதம், வான்கூவருக்கு வந்தவர் சிராக் ஆன்டில். கனடா வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்த அவர் சமீபத்தில் பணி அனுமதியைப் (Work Permit) பெற்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Tata Sierra 1st Drive Review: டாடா சியாரா SUV ஓட்டுறதுக்கு எப்படி இருக்குன்னு தெரியணுமா.? முதல் ஓட்டுநர் அனுபவம் - ரிவ்யூவ்
டாடா சியாரா SUV ஓட்டுறதுக்கு எப்படி இருக்குன்னு தெரியணுமா.? முதல் ஓட்டுநர் அனுபவம் - ரிவ்யூவ்
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Tata Sierra 1st Drive Review: டாடா சியாரா SUV ஓட்டுறதுக்கு எப்படி இருக்குன்னு தெரியணுமா.? முதல் ஓட்டுநர் அனுபவம் - ரிவ்யூவ்
டாடா சியாரா SUV ஓட்டுறதுக்கு எப்படி இருக்குன்னு தெரியணுமா.? முதல் ஓட்டுநர் அனுபவம் - ரிவ்யூவ்
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Embed widget