Gaza Watch Video: இஸ்ரேல்-ஹமாஸ் முதற்கட்ட அமைதி ஒப்பந்தம்; கொண்டாடும் இருநாட்டு மக்கள்; வைரலாகும் வீடியோக்கள்
காசா போர் ட்ரம்ப்பால் மத்தியஸ்தம் செய்யப்பட்டு, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இருநாட்டு மக்களும் அதை கொண்டாடி வருகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து முயன்று வந்தார். இந்நிலையில், சமீபத்தில் 20 அம்ச அமைதித் திட்டம் ஒன்றை அவர் முன்மொழிந்தார். அந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்ற நிலையில், அதை நிராகரித்த ஹமாஸ், சில திருத்தங்களை கேட்டது. ஆனால், திட்டதை ஏற்றாக வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இஸ்ரேல், ஹமாஸ் இடையே, அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட மஸ்த்தியஸ்த நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஹமாசும் தன் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதாகவும் ட்ரம்ப் இன்று அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காசாவில் உள்ள மக்களும், இஸ்ரேல் மக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
The celebrations of the ceasefire announcement in Gaza and Tel Aviv. pic.twitter.com/bXUtlOdsgp
— Ihab Hassan (@IhabHassane) October 9, 2025
இதேபோல், அதிகாலையில் காசாவில் சாலையில் திரண்டு மக்கள் கொண்டாடிய காட்சிகளை ஒருவர் பகிர்ந்துள்ளார்.
3 AM in Gaza. Celebrations outside al-Aqsa Martyrs Hospital in Deir al-Balah at the news of the ceasefire. pic.twitter.com/kl1V6oqXai
— Séamus Malekafzali (@Seamus_Malek) October 9, 2025
மற்றொரு வீடியோவில், மத்திய காசா பகுதியில் சாலையில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
A scene from the celebrations marking the ceasefire at Al-Aqsa Martyrs Hospital in central Gaza Strip🇵🇸. pic.twitter.com/p9yMaL0wnM
— Osama Abu Rabee أسامة أبوربيع (@dn_osama_rabee) October 9, 2025
2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வரும் நிலையில், காசா பகுதி மக்கள் மற்றும் இஸ்ரேலிலும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே பிணைக் கைதிகள் பறிமாற்றம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















