FIFA World Cup: உலககோப்பை கால்பந்து திருவிழா: சிறப்பு டூடுல் கேம் வெளியிட்ட கூகுள்...!
Google Doodle - FIFA World Cup 2022 : கத்தாரில் இன்று தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை சிறப்பித்திருக்கும் கூகுள் ‘டூடுல்,’
Google Doodle - FIFA World Cup 2022 : கத்தார் நாட்டில் உலககோப்பை கால்பந்து திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் ’சிறப்பு டூடுல்’ வெளியிட்டுள்ளது. இன்று மாலை தொடக்க விழா நடைபெறுகிறது. அதை தொடர்ந்து லீக் சுற்றுப் போட்டிகளும் இன்று தொடங்குகின்றன. கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கு இன்றிலிருந்து கொண்டாட்டம்தான்.
கூகுள் டூடுல் (Google Doodle):
கூகுள் நிறுவனம் வரலாற்று சிறப்பு மிக்க தினம், துறை சார்ந்த சிறந்த ஆளுமைகளின் பிறந்தநாள், நினைவு நாள் உள்ளிட்ட பலவற்றினையும் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், மரியாதை செலுத்தும் விதமாகவும் ‘டூடுல்’ வெளியிடுவது வழக்கம்.
இன்று முதல் உலககோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்க இருப்பதால் ‘சிறப்பு டூடுல்’ வெளியிட்டுள்ளது. அதில் கூகுளில் (google) 'O' என்ற எழுத்து ’கால்பந்து’ போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்போர்ட்ஸ் பூட்ஸ்கள் கால்பந்து விளையாடுவது போல அனிமேட் செய்யப்பட்டிருக்கிறது.
ஃபிபா உலகக் கோப்பை திருவிழா:
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA (Fédération Internationale de Football Association)) சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடங்கவுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் ஆவலும் அதிகரித்து வருகிறது.
இந்த தொடரில் 2 அணிகள் பங்கேற்கின்றன. 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். மொத்தம் 64 போட்டிகள்; இம்முறை எந்த அணி கோப்பை வெல்லும் என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. டிசம்பர் 18 ஆம் தேதி போட்டிகள் நிறைவடைகின்றன.
நீங்களும் சேர்ந்து விளையாடலாம் நண்பர்களே!
கால்பந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறும் போது நீங்கள் உங்கள் மொபைலில் விளையாடும் வீடியோ கேம் மூலம் உங்களுடைய மனம் கவர்ந்த அணிக்கு ஆதரவினை தெரிவிக்கலாம்.
எப்படி விளையாடுவது?
உலககோப்பை கால்பந்து போட்டியின் அட்டவணையின் படி, ஒவ்வொரு நாளும் போட்டி நடைபெறும் போதே லைவ் ஆக விளையாட முடியும். மற்ற நேரங்களிலும் விளையாடலாம். 'Game' ஐகானை கிளிக் செய்தால் போதும். மொபைலில் ‘கேம்’ மெனு பாப் அப் ஆகும். அதை கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான அணியை தேர்வு செய்து விளையாடலாம். நிஜ போட்டி முடியும் போது, வீடியோ கேமிலும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
இன்றைய போட்டி:
இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கத்தார் அணியும், ஈக்வேடார் அணியும் களம் காண்கின்றன.
நேரலை:
ஃபிபா உலககோப்பை Sports18 மற்றும் Sports18 HD TV -யில் ஆங்கில மொழி வர்ணனையுடன் நேரலையாக ஒளிப்பரப்பாகும். மேலும், தொடக்க விழாவினை ஃபிபாவின் வலைதளம் மற்றும் டிவிட்டரில் காணலாம்.