Shinzo Abe Killer: அடுத்தடுத்து அதிர்ச்சி.. ஷின்சோ அபேவின் கொலையாளி குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள் இதோ...
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை நாரா நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுடப்பட்டார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை நாரா நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுடப்பட்டார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற ஒரு சில மணி நேரங்களிலேயே, கொலையாளி கைது செய்யப்பட்டார்.
மேற்கு நகரமான நாராவில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே ஷின்சோ அபே பிரச்சார உரையை ஆற்றிக் கொண்டிருந்தபோது இரண்டு முறை அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். அபேவை சுட்டவர், சாம்பல் நிற டி-சர்ட் மற்றும் பழுப்பு நிற கால்சட்டையை அணிந்திருந்தார்.
இதையடுத்து, அவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிபொருள்கள் இருப்பது கண்டெடுக்கப்பட்டது.
Former Japanese Prime Minister Shinzo Abe has died after being shot while giving a speech, local media reportshttps://t.co/llt6D7cjXl
— BBC Breaking News (@BBCBreaking) July 8, 2022
அபேவை சுட்டு கொன்றவர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்
- அபேவை சுட்டு கொலை செய்தவரின் பெயர் டெட்சுயா யமகாமி என தெரிய வந்துள்ளது.
- 41 வயதான டெட்சுயா யமகாமி, ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார்.
- துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, அபேவுக்கு பின்பு 10 அடி தூரத்தில்தான் யமகாமி நின்று கொண்டிருந்தார்.
- உரை நிகழ்த்தி கொண்டிருந்த அபே, நடுவிலேயே நிலைகுலைந்து கீழே விழுந்துவிட்டார். பின்னர், பாதுகாப்பு படையினர் கொலையாளியை பிடித்தனர்.
- துப்பாக்கியால் சுட்ட பின்பும், கொலையாளி தப்பிக்க முயற்சி செய்யவில்லை என ஜப்பான் பொது செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
- நாரா நிஷி காவல் நிலையத்தில் கொலையிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கொலை செய்யும் எண்ணத்துடன்தான் அபேவை சுட்டுதாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
- அபேவை சுட பயன்படுத்திய துப்பாக்கியை கொலையாளி தனது வீட்டியேலேயே தயாரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
Shinzo Abe killer's confession: Why navy veteran shot Japan's ex-PM https://t.co/0t3esYhKGa pic.twitter.com/9jLHV7JJ6j
— Daily Mail Online (@MailOnline) July 8, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்