மேலும் அறிய

Israel - Palestine : இஸ்ரேல் விவகாரத்தில் பல்டி.. பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பேசியதா சீனா?

பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்து வரும் செயல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுப்பதாகக் கூறி, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

உலக அளவில் அதிர்வலைகளை கிளப்பும் இஸ்ரேல் போர்: 

குறிப்பாக, பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்து வரும் செயல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கடந்த 18 நாள்களாக நடந்து வரும் போரில் 2,000 குழந்தைகள் 1,100 பெண்கள் உள்பட 5000 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும், இஸ்ரேல் அதை மறுத்து வருகிறது. காசாவில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்து பொருள்கள், தண்ணீர், உணவு ஆகியவற்றை உலக நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்த விவகாரத்தில், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இந்தியாவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது. அதேபோல, தன்னை தற்காத்து கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாக கூறிய ரஷியா, சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியது.

நிலைபாட்டை மாற்றிய சீனா:

அந்த வகையில், கடந்த வாரம் பேசிய சீன அதிபர் ஜின்பிங், "போர் நிறுத்தத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்" என்றும் "பாலஸ்தீன விவகாரத்தில் நியாமான இறுதியான தீர்வை காண வேண்டும்" என்றும் "அதற்காக எகிப்து மற்றும் அரபு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட தயார்" என தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தீவிரவாக அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பை கண்டிக்காத சீனாவின் இந்த நிலைபாடு பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில், சீனா தனது நிலைபாட்டை மாற்றி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. ரஷியா தெரிவித்துள்ள அதே கருத்தை எதிரொலித்துள்ள சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, "ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தன்னை தற்காத்து கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹனிடம் தொலைபேசியில் பேசிய வாங் யி, "ஒவ்வொரு நாட்டிற்கும் தன்னை தற்காத்து கொள்ள உரிமை உள்ளது. ஆனால், சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்பட்டு பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்" என்றார்.

அமெரிக்காவுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பயணம் மேற்கொள்ள நிலையில், சீனாவின் இந்த புதிய நிலைபாடு புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. சீன தலைநகர் பெய்ஜிங் சென்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஹமாஸ் அமைப்பை கண்டிக்காதது குறித்து அதிபர் ஜின்பிங்கிடம் முறையிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: காசாவில் இருளில் மூழ்கப்போகும் மருத்துவமனைகள் - கர்ப்பிணிகள், குழந்தைகள் உயிருக்கு அபாயம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Embed widget