(Source: ECI/ABP News/ABP Majha)
இந்தியாவுக்காக ’ஓவர் டைம்’ வேலைப்பார்க்கும் சீனா
இந்தியாவின் ஆக்சிஜன் தேவைக்காக சீனா தனது மருத்துவ உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை ஓவர் டைம் வேலை செய்ய வைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்திசெய்வதற்காக சீனா தங்களது மருத்துவ உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ‘ஓவர்டைமாக’ வேலைப்பார்த்து வருவதாக சீனா கூறியுள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டோங் கூறுகையில்,’ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை எடுத்துவருவதற்காக சரக்கு விமானங்கள் திட்டத்தில் இருக்கின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Chinese medical suppliers are working overtime on orders from India, at least 25000 orders for oxygen concentrators in recent days. Cargo planes are under plan for medical supplies. Chinese customs will facilitate relevant process.
— Sun Weidong (@China_Amb_India) April 28, 2021
இந்தியாவில் கடந்த 48 மணிநேரத்துக்கு முந்தைய நிலவரப்படி 3,79,308 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒருநாள் எண்ணிக்கை 17,000ஐத் தாண்டியது.நேற்று ஒரே நாளில் மட்டும் இங்கே 107 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்களுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்கு உதவும் அடிப்படையில் ஆக்சிஜன்களை அனுப்பிவருகின்றன.உள்நாட்டில் தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்திச் செய்யப்பட்டு வருகின்றன பிஎம் கேர் திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களில் 500 மருத்துவ பிராணவாயு ஆலைகள் நிறுவப்பட இருக்கிறது. மேலும் இந்தியாவுக்கு இதுவரை 40 நாடுகள் உதவ முன்வந்துள்ளதாக வெளியுறவுத்துறைச் செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்க்ளா தெரிவித்துள்ளார்.