Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
Lottery: அபுதாபியில் பணியாற்றி வரும் ஐதராபாத்தைச் சேர்ந்த நபருக்கு 2 கோடி ரூபாய்க்கான லாட்டரி டிக்கெட் அடித்துள்ளது.

Lottery: அபுதாபியில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த நபர், ஒரே இரவில் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.
ரூ.2 கோடிக்கான லாட்டரி:
ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்ட நம்பள்ளி ராஜமல்லையா, கடந்த 30வருடங்களாக அபுதாபியில் வசித்து வருகிறார். 60 வயதான அவர், கட்டட வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். அவ்வபோது ஆன்லைன் - லாட்டரி டிக்கெட் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அந்த வகையில் அண்மையில் அவர் வாங்கியிருந்த ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டிற்கு, ஒன் மில்லியன் திர்ஹாம் அதாவது இந்திய மதிப்பில் 2 கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்து 460 ரூபாய் லாட்டரி அடித்துள்ளது. 270 என்ற எண்ணுக்கு 406835 என்ற டிக்கெட்டை வாங்கி, ராஜமல்லையா இந்த பெரும் பரிசைப் பெற்றார்.
தனியாக வசித்து வரும் ராஜமல்லையா..!
ஐதராபாத்தை சேர்ந்த நம்பள்ளி ராஜமல்லையா, அபுதாபியில் தனியாக வசித்து வருகிறார். அவரது மனைவி இந்தியாவில் தங்கியுள்ளார். அவரது குழந்தைகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அழைத்து வரப்பட்டாலும், தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தனது நண்பர்களிடமிருந்து லாட்டரி டிக்கெட்டைப் பற்றி அவர் அறிந்துகொண்டார். பின்பு கையில் ஓரளவு சேமிப்பு இருக்கும் நேரத்தில் மட்டும் லாட்டரி டிக்கெட்டை வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அந்த வகையில் இந்த முறை 20 நண்பர்களுடன் சேர்ந்து லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அந்த டிக்கெட்டிற்கு தான் தற்போது பரிசு விழுந்துள்ளது.
View this post on Instagram
ராஜமல்லையா மட்டற்ற மகிழ்ச்சி:
லாட்டரி வென்றது தொடர்பாக ராஜமல்லையா, “இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் மீண்டும் டிக்கெட் வாங்கத் தொடங்கினேன். வெற்றி பெற்றதாக எனக்கு அழைப்பு வந்ததும், நான் முற்றிலும் மூழ்கிவிட்டேன். நான் அனுபவித்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது நான் முன்பு எப்போதும் அனுபவித்த எதையும் போலல்லாமல் இருந்தது. இது எனது முதல் வெற்றி. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த எனது நண்பர்களுடன் பரிசை பகிர்ந்து கொள்வேன். மீதமுள்ள தொகை எனது குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும். வெற்றி என்னை நம்பமுடியாத அதிர்ஷ்டமாக உணர வைத்தது. நான் தொடர்ந்து பங்கேற்பேன்” என ராஜமல்லையா தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

