விபத்தில் இறந்த 12 வயது மகன்! டயரியில் தாய் கண்டுபிடித்த சீக்ரெட்.. படிச்சா அழுவீங்க..
தாயின் நெகிழ்ச்சிப்பதிவுக்கு பதிலளித்துள்ள பலரும் சிறுவனின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்தனர்.
விபத்தில் இறந்த 12 வயது சிறுவனின் குறிப்பு நோட்டில் இருந்து முக்கியமான தகவலை எடுத்த சிறுவனின் தாயார் அது மூலம் அச்சிறுவனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பகுதியில் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வந்த சிறுவன் க்யான். 12 வயதான க்யானுக்கு பியானோ வாசிப்பது என்றால் அலாதி பிரியம். இதனால் தனியாக பியானோ வகுப்புச் சென்று பயிற்சியும் பெற்றுள்ளான் அச்சிறுவன். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சிக்கிய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனின் உயிரிழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் அக்குடும்பமே சோகத்தில் ஆழ்ந்திருந்தது. சிறுவனின் தாயாரான அமண்டா சிறுவனின் புத்தகம், நோட்டு என அவனது உடமையை எடுத்து நினைவுகளை பகிர்ந்துகொண்டு இருந்துள்ளார்.
மன அழுத்தம் தாங்க முடியல... கடிதம் எழுதி வைத்து விட்டு 13 வயது சிறுவன் தற்கொலை!
அப்போது அச்சிறுவன் க்யானின் இசை தொடர்பான நோட்டையும் அமண்டா ஆராய்ந்துள்ளார். அந்த நோட்டில் தான் கற்றுக்கொண்ட இசையை வைத்து தானாகவே ஒரு இசைக்கான குறிப்பை எழுதி வைத்திருந்துள்ளான் க்யான். இதனைக்கண்ட நெகிழ்ச்சி அடைந்த அந்த தாய் மகன் உருவாக்கிய இசையை வைத்தே அவனது இறுதிச்சடங்கை செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டுள்ளார். உடனடியாக பேஸ்புக்கில் பதிவிட்ட அமாண்டா,'' இந்த இசையை எப்போது உருவாக்கினான் என்பது எனக்கு தெரியவில்லை. யாராவது இசை தெரிந்தவர்கள் இருந்தால் இந்த இசைக்குறிப்பை இசையாக தர முடியுமா? என மகன் இறுதிச்சடங்கில் பயன்படுத்துவேன் எனக் குறிப்பிட்டார்.
பறந்து கொண்டிருந்த விமானத்தில் இரவோடு இரவாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பயணி!
ஒரு தாயின் நெகிழ்ச்சிப்பதிவுக்கு பதிலளித்துள்ள பலரும் சிறுவனின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்தனர். இசை தொடர்பான பலரும் க்யானின் இசைக்குறிப்பு தொடர்பாக பதிவிட்டு இருந்தனர். இறுதியில் குயின்ஸ்லேண்ட் சிம்பொனி இசைக்குழுவின் 16 பேர் அடங்கிய குழு க்யானின் இசைக்குறிப்பை இசையாக்கி அதனை வாசித்து இறுதிச்சடங்கை செய்தனர்.
இது குறித்து தெரிவித்த அமாண்டா, '' க்யானுக்கு பியானோ என்றால் உயிர். 6 மாதமாகவே அவன் பியானோ கற்று வருகிறார். இசையில் சாதிக்க வேண்டுமென அவன் விரும்பினான். சீக்கிரமே பிரிந்துவிட்டான். சரியாக நிறைவடையாத ஒரு அழகான இசைதான் இது என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்