NASA | 2022 தொடக்கமே விண்கல்லோடுதான்.. நாசா கொடுத்த எச்சரிக்கை!
2022ஆம் ஆண்டின் தொடக்கமே, பூமியை நோக்கி வரும் பெரிய விண்கல்லாக இருக்கப் போகிறது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள தகவல்கள் நாம் வருந்த வேண்டுமா என்ற கேள்விக்கு விடை தருகின்றன.

2022ஆம் ஆண்டின் தொடக்கமே, பூமியை நோக்கி வரும் பெரிய விண்கல்லாக இருக்கப் போகிறது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள தகவல்கள் நாம் வருந்த வேண்டுமா என்ற கேள்விக்கு விடை தருகின்றன.
நாசா வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் Asteroid 2014 YE15 என்ற விண்கள் சுமார் 74 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதுடன், வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று பூமியை வந்தடையும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த விண்கல் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
150 மீட்டர்களை விட பெரிய பொருள்கள், பூமியை சுமார் 7.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்து அணுகுதல் முதலானவற்றைக் கொண்ட பொருள்கள் மட்டுமே ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன. சுமார் 7 மீட்டர் அளவில் இருக்கும் தற்போதைய Asteroid 2014 YE15 விண்கல் ஒரு பேருந்தின் அளவைக் கொண்டிருக்கும் என நாசா தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் அளவாலும், குறைந்த தொலைவின் காரணமாகவும், இந்த விண்கல் ஆபத்தானதாக இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியின் போது விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி ஆபத்து ஒன்று நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 29 அன்று, பூமிக்கு மிகவும் நெருக்கத்தில் சுமார் 149 மீட்டர் விண்கல் ஒன்று நகரப் போவதாகக் கூறப்பட்டுள்ளது. இது சுமார் 35.4 லட்சம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்து பயணித்து வருகிறது. இந்த விண்கல்கள் ஒரு கிரகத்திற்கு அருகில் வரும் போது அடுத்த இரு தினங்களுக்கு அதன் அருகிலேயே சுற்றி வரும் வாய்ப்புகள் உண்டு. எனவே அடுத்தடுத்து நிகழவுள்ள ஐந்து விண்கல் தாக்குதல்களை நாசா தொடர்ந்து கண்காணித்து, அவற்றைக் குறித்த விவரங்களையும் வெளியிட்டு வருகிறது.
மேலும், இவை ஆபத்து இல்லை எனக் கூறினாலும், அவற்றின் ஆற்றலை நாம் நிராகரிக்க முடியாது. சிறிய விண்கற்கள் கடந்த காலங்களில் மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு, ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் விழுந்து 20 மீட்டர் அளவிலான விண்கல் வெடித்ததில், அதில் சுமார் 26 முதல் 33 அணுகுண்டுகள் வரை வெடித்தால் ஏற்படும் ஆற்றல் வெளிப்பட்டது. இதில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்ததோடு, சுமார் 1500 மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
விண்கற்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் பூமியைப் பாதுகாப்பது மட்டுமின்றி, இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்தும் அறிந்து கொள்வதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. கிரகங்கள், நிலவுகள் முதலானவை உருவாவதில் விண்கற்களுக்கு அதிகம் பங்குண்டு. எனவே விண்கற்களை ஆய்வு செய்வதன் மூலம், பூமி உருவான கதை, பிற சூரியக் குடும்பங்களின் நிலை முதலானவற்றை அறிந்து கொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

